Wednesday, November 5, 2014

பென்சில்

முனை தீட்டப்பட்ட பென்சில் நான்
என் தலை சீவியவர் எத்தனை
எத்தனை பேர்
என் தலை குனிய வைப்பவரையும் தலை நிமிர வைப்பேன்
நான் அழிந்து அழிந்து
பிறரை வாழவைப்பேன்.
என் கண்ணீர் கதைகளை
என் தோழனிடம் கேளுங்கள்
அவன்தான் என் தவறுகளை எல்லாம் களையெடுக்கிறான்.

No comments:

Post a Comment