Monday, November 17, 2014

பொய்க்கால் குதிரைகள்

தமிழ் சினிமாவை தடம்புரட்டி தொடர்ந்து நான்கு வெள்ளி விழா படங்களை கொடுத்தவர் இயக்குனர் இமயவரம்பன்.

பிரஸ் மீட்டிங்

"சார் உங்க அடுத்த படம் என்ன?"

அடுத்த காட்சிக்கான விபரங்களை உதவியாளரிடம் விளக்கி விட்டு கேள்வி கேட்ட நிருபரை பார்த்தார் இமயவரம்பன்.

கொஞ்சம் சாவகாசமா உட்கார்ந்து கொண்டார். ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்து புகையை வெளியே விட்டார்.

"இது மீனவர்களை பற்றிய கதை"

"சார் ஏற்கனவே மீனவர்களை பற்றி நிறைய படம் வந்திருக்கே. நீங்க என்ன புதுசா சொல்லப்போறிங்க"

"உங்கள் கேள்வி நியாயம்தான். நான் அவங்க வாழ்க்கையை அல்ல அவங்க மனச படம் பிடிக்க போறேன்"

"சார், நீங்கள் தமிழ் இயக்குனர். ஆனால் உங்கள் கதாநாயகிகள் எல்லோரும் தமிழ் தெரியாதவர்கள். இதுதான் நீங்கள் தமிழுக்கு ஆற்றும் சேவையா?"
-கேட்டது ஒர் இளம் பெண் நிருபர்.

இமயவரம்பன் கோபத்தில் துடித்தார். அவர் குரல் தடுமாறியது. மீன்டும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தார்.

இப்போது கேள்வி கேட்ட பெண்ணை பார்த்து கேட்டார்

"நீங்கள் தமிழ்ப்பெண் தானே. நீங்க நடிக்கிறிங்களா? இந்த படத்தில. நானா முடியாதுங்குறேன். யாரும் நடிக்க வருவதில்லை. ஒன்னு புரிஞ்சிக்கிங்க. மத்த தொழில் மாதிரி இதுவும் ஒரு தொழில்தான். அப்படி யாராவது தமிழ்ப்பெண்கள் நடிப்பதென்றால், காலையில் வந்து மாலையில் போய் விடலாம். இப்படி சொன்னாக்கூட யாரும் வரமாட்டேங்குறாங்க. இது என் தவறு இல்லை"

பத்திரிக்கையாளர் கூட்டம் இனிதே நிறைவடைந்து இயக்கனர் வீடு திரும்பினார்.

அதே நேரம் இயக்குனரின் மூன்று வயது மகள் தொலைக்காட்சியில் வந்த சினிமா பாடலுக்கேற்ப நடனமாடிக்கொண்டிருந்தாள்.

இதை பார்த்ததும் கோபத்தின் உச்சிக்கே போனார். அந்த குழந்தையை அடி அடியென்று அடித்தார்.

"இனிமே டான்ஸ் ஆடுவியா ஆடுவியா? நீ என்ன ______யாளா?"

"இல்லப்பா அடிக்காதிங்கப்பா ஆடுலப்பா வலிக்குதுப்பா. விட்டுடுங்கப்பா"

No comments:

Post a Comment