காலையில் தன் வீட்டுவாசலில் தான் சொன்னபடி சரியாக வந்து நின்ற முத்துவை பார்த்தார் சதாசிவம்.
"அடடே முத்துவா? உனக்காகத்தான் எடுத்து வச்சிருந்தேன்.திடிர்னு ஒரு செலவு. நீ போய்ட்டு நாளைக்கு சாய்ங்காலம் வா"
"சரிங்க சார்" என்று சொல்லி புறப்பட்டான் பத்தாவது பரிட்சை எழுதியிருக்கும் முத்து.
"நீ ஒன்னும் கவல படாதடா தம்பி.உன் படிப்புக்கு நானாச்சி."
முத்துவின் அப்பன்தான் இவனையும் கூட்டிக்கொண்டு சதாசிவத்திடம் வந்து நின்றான்.
"ஐயா, ஒரே புள்ள.நல்லா படிக்கிறான். மேல படிக்க வைக்கனும்.. சரியான மழைமாசி இல்ல. விளைச்சல் இல்ல. கொஞ்சம் பணம் கொடுத்து உதவி பண்ணுங்க"
"எவ்வளவு?"
"ஒரு பத்தாயிரம் ரூபா கொடுங்க"
"சரி. நாளைக்கு நீ வரவேண்டாம் உன் பையன மட்டும் அனுப்பி வை"
அதிலிருந்து முத்து வருவதும் சதாசிவம் சாக்குபோக்கு சொல்லி அனுப்புவதும் வாடிக்கையானது.
அவனும் சளைக்காமல் வந்து நிற்பான்.இவரும் ஏதாவது சொல்லஅ அனுப்பி வைப்பார்.
இதையெல்லாம் பொறுக்கமுடியாத சதாசிவம் மனைவி கேட்டே விட்டாள்.
"பாவம் அந்தப் பிள்ளை இப்படியா அலைய விடுவாங்க. பணத்த கொடுங்களேன்"
"அடி யாருடி இவ. விபரம் தெரியாம இருக்கா. கொடுப்பேன்டி.உடனே கொடுத்துட்டா அவனுக்கு பணத்தோட அருமை தெரியாதுடி"
'எம்புருசனுக்குத்தான் எம்புட்டு அறிவு' என வியந்து நின்றாள்.
No comments:
Post a Comment