Thursday, November 6, 2014

ஒரு சமயம் எங்களுக்கு கொடுக்கப் பட்ட வேலை ஒரு பெரிய கண்ட்ய்னரை காலி செய்வது. அது ஒரு அமெரிக்கன் கம்பெனி.

ஒரு நாள் முழுவதும் அதிலிருந்த ஏராளமான பொருட்களை நாங்கள் இரண்டு பேர் வெளியே கொண்டு வந்து வைப்போம். போர்க் லிப்ட் வந்து எடுத்து போய் வேறு இடத்தில் வைக்கும்.

எல்லா பொருட்களையும் அகற்றியபின் நாங்கள் இருவரும் வெகுசுத்தமாக புதிய கண்ட்ய்னர் போல் அழகாக ஒரு தூசுகூட இல்லாமல் சுத்தம் செய்தோம்.

அதை சுத்தம் செய்ய நாங்கள் எடுத்துக்கொண்ட நேரம் வெறும் பத்து நிமிடம் மட்டுமே.

அமெரிக்க காரர் வந்து பார்த்தார். கண்ட்ய்னர் வெகு அழகாக புதியது போல் சுத்தம் செய்ததை பார்த்து மகிழ்ந்து போய்,

"வெல்டன் பாய்ஸ்.தாங்க் யூ"

என்று கை குலுக்கி விட்டு போனார்.

அவர் நமக்கு கை குலுக்கவோ நன்றி சொல்லவோ அவசியமில்லை. அவர் கொடுக்கும் சம்பளத்திற்காகத்தான் வேலை செய்கிறோம்.

ஆனால் அந்த பத்து நொடி கை குலுக்கலில் எங்கள் களைப்பு தீர்ந்து போனது.

No comments:

Post a Comment