ஒரு குழந்தை பிறந்தது முதல் பெற்றவர்கள் கவனம் அந்த குழந்தை மேலேயே இருக்கும்.
முதன் முதலாக முகம் பார்த்து சிரித்தது, பெயரை சொல்லிக்கூப்பிட்டால் திரும்பிப் பார்த்தது, எத்தனைக்குரல்களுக்கு இடையேயும் தன் தாயின் குரலை அடையாளம் கண்டு பிடிப்பது,
முதன்முதலாக எழந்து நடக்க முயற்சித்தது,.. இன்னும்... இன்னும்.
குழந்தையின் ஒவ்வொரு புதிய முயற்சியிலும் பெற்றவர்களின் கவனம் இருக்கும்.
முதன்முதலாக தளிர்நடை போடும்போது எங்கே பிள்ளை விழுந்து விடுவானோ என்ற பயம் இருக்கும்.
முதன் முதலாக சைக்கிள் ஓட்டும்போது பெத்தவங்க மனம் படும் பாடு சொல்லிமுடியாது.
எங்கே நம் பிள்ளை கீழே விழுந்து விடுவானே... விழுந்துவிடுவாளோ....
அதே பதைபதைப்பு தான் அவர்கள் காதல் தெரியவரும்போதும் வருகிறது.
நல்லா படிக்கிறாங்க.. அறிவா பேசுறாங்க.. ஆனா தனக்கேத்த துணைய எத்தனை பேர் மிகச்சரியாக தேர்ந்து எடுக்கிறார்கள்.
நான் ஒன்றும் காதலுக்கு எதிரி இல்லை.
இந்த விசயத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்ணை பெற்றவர்கள்தான்.
பிள்ளைகளுக்காக பார்த்து பார்த்து செய்யும் பெற்றவர்கள் அவர்களுக்காக ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து தரமாட்டார்களா ?
ஆனும்பெண்ணும் படிக்கும்போதே காதல். இது தேவையா?
முதலில் உங்கள் கால்களில் நிற்க கற்றுக்கொள்ளுங்கள். பிறகு உங்களுக்கேற்ற துணையை தேர்ந்தெடுங்கள்.
ஆனோ பெண்ணோ இருபது வயதுக்குள் எது நல்லது எது கெட்டது என்பதை தீர்மானிக்க முடியாது..
நீங்கள் விரும்பும் துணை அனைத்து தகுதிகள் இருந்தும் ஜாதியை காரணம் காட்டி திருமணத்தை தடுத்தால் அது எற்கமுடியாததுதான்.
பேசி புரிய வையுங்கள்.
எந்த தாயும் எந்த தகப்பனும் தங்கள் பிள்ளைகளின் நல்வாழ்க்கைக்கு எதிரி இல்லை.
No comments:
Post a Comment