Wednesday, November 5, 2014

திருமணம் முடிந்து முதன்முதலாக தலைதீபாவளிக்கு வரும்போது முதன்முதலாக அவள் தனக்கென கேட்டது பெரிதாக ஒன்றுமில்லை.
பெரிதாக கேட்டாலும் செய்வதற்கும் ஒன்றுமில்லை.
அதையும் உத்தேசித்தே அவள் கேட்டிருப்பாள்.

"எனக்கு ஒரு மெட்டி வாங்கி கொடு மாமா"

25 ரூபாயில் அழகாய் அலங்கரித்தது அவள் கால்விரல்களை.

மனங்கொள்ளா சந்தோசம் அவளுக்கு.
மனம் பரிதவித்தது எனக்கு

இதற்குமேல் செய்யமுடியவில்லையே என்ற ஏக்கம் என் மனதிற்குள்.

No comments:

Post a Comment