Wednesday, November 5, 2014

திருமணம் முடிந்ததும் முதன்முதலாக மனைவிக்கு என்ன பரிசு தருவாங்க?

நான் வாங்கிக்கொடுத்தது அரிச்சுவடியும், சிலேட்டும்.

அடுத்தது செந்தமிழ்ச்செல்வி என்ற பெயரை சுருக்கி கையெழுத்து போட வசதியாக செல்வி என்று மாற்றினேன். அதையே ரேசன் கார்டிலும் பதிவு செய்தேன். கையெழுத்து போடவும் கற்றுக்கொடுத்தேன். ஓர் அரசு அலுவலரின் மகள் தொடக்கப்பள்ளி அளவு கூட படிக்காதது எனக்கு மிகவும் வருத்தம்தான்.

படித்திருந்தால் எங்கோ போயிருக்க வேண்டிய ஒருப் பெண் படிக்காமல் போனது யார் செய்த தவறு?

ஒரு குடும்பத்தின் தாய் கல்வியறிவு இல்லாததால் வந்தது.

தான் படிக்கா விட்டாலும் தன்பிள்ளைகளாவது நன்றாக படிக்கவேண்டும் என்று படாதபாடுகிறாள் ஒரு தாயாக.

படிப்பு வாசனையே இல்லாத ஒரு பெண்ணை செய்தித்தாள் படிக்கும் அளவிற்கு வந்தது எனக்கு மகிழ்ச்சியே. மொபைலில் வரும் தமிழ்ப்பெயர்களை படித்து கால் பண்ற அளவிற்கு இப்போது முன்னேற்றம்.

நீங்கள் பெண்ணியம் பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமென்றால் என் மனைவியிடம் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் ஒன்று, ஒருவேளை என்மனைவி நன்கு படித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? வேறென்ன? மாப்பிள்ளை மாறி போயிருப்பான்.

No comments:

Post a Comment