Thursday, November 6, 2014

மனம் ஒரு (வி)சித்திரம்


"ஒரு லிட்டர் ஏஷியன் க்ரே கலர் ஆயில் பெயின்ட் கொடுங்க"

"ஏஷியன் இல்ல, டியுலக்ஸ் நல்லா இருக்கும். வாங்கிக்கிறிங்களா?"

"இல்ல எனக்கு ஏஷியன்தான் வேனும்"

"சார் இரண்டுமே ஒரே தரம்தான் விலையும் ஒன்னுதான்"

"இல்லிங்க எனக்கு வேனாம்"

"இருங்க ஏஷியன் மிக்ஸிங் பண்ணித்தரேன். கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க"

உண்மையில் கடைக்காரர் டியுலக்ஸ் பெயின்டை ஏஷியன் டப்பாவில் அடைத்துக் கொடுத்தாலும் வாங்கித்தான் ஆகவேண்டும்.

காரணம் ஏஷியன் நல்ல கம்பெணி என்ற எண்ணம் என் மனதோடு ஒன்றி விட்டது. அதை யாராலும் மாற்ற முடியாது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பரணி பஸ்ல போகலாமுன்னு முடிவெடுத்துவிட்டு. அந்த பஸ் கிடைக்காவிட்டால் வேறு பஸ்ஸில் போக மனமே கொள்ளாது.

அடடா விட்டுடோமே!

பரணி பஸ்க்காரன் என்னை ஒன்றும் இலவசமாய் ஏற்றிச்செல்லப்போவதில்லை.

ஒரு விசயம்: இந்த பரணி பஸ் GVR என்று பெயர் மாற்றம் பெற்று ஏறக்குறைய 4 வருடங்கள் ஆகிறது. ஆனாலும் அது எங்களுக்கு பரணிதான்.

~~~~~~~~~~~~~~~~~~

சிலதினங்கள் முன் தமிழ் அரசி, தமிழ்பாரதியாக பெயர் மாற்றியபோது என் மனதோடு அந்த பெயர் ஒன்றவில்லை. அறிவுக்குத் தெரியும், இரண்டும் ஒரே ஆள்தான் என்று. ஆனால் மனது ஏற்றுக்கொள்ளவில்லையே.

மனம் ஒரு விசித்திரம்.அதை பக்குவமாக கையாண்டால் நாம் செய்யும் ஒவ்வொன்றும் சித்திரமாகும்.

No comments:

Post a Comment