Thursday, November 20, 2014

வெற்றி எங்கள் கையிலே வெள்ளிப்பணம் பையிலே


ஆளில்லா சாலையில் வேகமாய் வாகனத்தை வேகமாய் ஓட்டிச் செல்வது சாதனையல்ல.

ஜனநெருக்கடி மிகுந்த சாலையில் பின்னிருக்கையில் ஒருவரை உட்கார வைத்து லாவகமாய் உங்கள் பைக்கை நிற்காமல் ஓட்டி செல்லும் போது புரியும், எது சாதனை என்று.

சிறந்த மல்யுத்தவீரன் அறிவான். தன்னை விட பலசாலியை வீழ்த்துவதே வீரம் என்று.

பிரச்னை இல்லாத வாழ்க்கையில் சந்தோசமாக இருப்பதில் என்ன பெருமை இருக்க போகிறது?

ஏகப்பட்ட பிரச்னைக்கு நடுவே எதிர்நீச்சல் போட்டு போராடி வாழ்க்கையில் முன்னேறும் போதுதான் ஒருவன் பெருமை போற்றப்படுகிறது.

இருக்கும் நாற்பது ஐம்பது மல்யுத்த வீரர்கள் அத்தனை பேரையும் ஒரே ஸ்டேஜ்ல இறக்கி விட்டார்கள்.

அத்தனை பேரையும் வீழ்த்தி கடைசியாக எவன் ஒருவன் மேடையை விட்டு கீழே இறங்காமல் இருக்கிறானோ அவன்தான் வின்னர்.

அத்தனை பேரும் ஆளாளுக்கு அடித்துக் கொண்டு ஒவ்வொருவராக கீழே இறங்கும் நேரத்தில் ஒருவன் சதி திட்டம் தீட்டுகிறான்.

அவன் இன்னொருவனிடம் பேரம் பேசுகிறான். அதன் படி இருவரும் சேர்ந்து எல்லோரையும் வெற்றி கொள்கிறார்கள்.

எல்லா வீரர்களையும் கீழே இறக்கி விட்டப்பின் கடைசியாக மேடையில் எஞ்சி இருப்பது இருவர் மட்டும்தான்.

இவர்கள் இருவரும் வெற்றியாளர்கள் என அறிவிக்கப்படும் நேரத்தில் யாருமே எதிர்ப்பார்க்காம காரியத்தை செய்கிறான் சதித்திட்டம் தீட்டியவன்

தன் தோழனை அடித்து கீழே தள்ளி விடுகிறான்.

தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து கொண்ட இரண்டாமவன் அந்த ஆளுயுர கோப்பையை அடித்து நொறுக்கி, தன்னை ஏமாற்றியவனையும் அடித்து நொறுக்குகிறான்..

வாழ்க்கை கூட இப்படித்தான். நீங்கள் ஏமாந்த நேரத்தில் காலை வாரி விடத்தயாராயிருக்கும், நீங்கள் ஏமாரத்தயாராக இருந்தால்.

No comments:

Post a Comment