சிலரை பார்த்த உடனே பிடித்து விடுகிறது. சிலரை எத்தனை தடவை பார்த்தாலும் பிடிப்பதில்லை.
நமக்கு பிடித்தவர்கள் என்ன குறை செய்தாலும் அதை நாம் தாங்கி கொள்கிறோம். இதற்கெல்லாம் நம் மனசுதானே காரணம்.
சிலருக்கு இயற்கையில் முகவசிகரம் அமைந்து விடுகிறது.
அந்த வகையில் மறைந்த எம்.ஜி.ஆர்.
முகவசிகரம் என்பது சிவப்பா அழகா இருக்குறவங்க கிட்டதான் இருக்க வேண்டும் என்பதில்லை.
அதிகமான மக்கள் கூடும் இடம்.ஒரே மாதிரி இரண்டு கடைகள்.
இரண்டிலுமே தரமான பொருட்கள்.
ஒரே மாதிரியான விலை.
ஆனாலும் ஒரு கடையில் கூட்டம் ஜேஜே ன்னு எப்ப பாத்தாலும்.
இன்னொரு கடையில வியாபாரம் சுமார்.
உங்களுக்கே தெரியுமே காரணம் என்னவென்று.
முதல்கடையில் கொஞ்சம் இதமான வார்த்தைகள் கொஞ்சம் புன்னகையான முகம் இருக்கும்.
சிலவீடுகள்ல புருசன் பொண்டாட்டிக்கு என்ன வாங்கி கொடுத்தாலும் திருப்தியே அடையமாட்டாங்க.
"ஆமா பெருசா ஊருல உலகத்துல இல்லாதத செஞ்சு போட்டுட்ட"
இந்த மாதிரி பொண்ணுங்க எத்தன நகை போட்டாலும் கன்றாவியாத்தான் இருக்கும்.
ஒரு முழப்பூவில் திருப்தியடையும் பெண்களை பார்த்தாலே கையெடுத்து கும்பிடத்தோனும்.
இவர்கள் உண்மையில் ஏழையாய் இருந்தாலும் உள்ளத்தில் மஹாலட்சுமிகள்.
No comments:
Post a Comment