Thursday, November 6, 2014

ஐ...!


ஐ...!
எப்போது உன்னை
நினைத்தாலும்
மனதில் சம்மணமிட்டு
அமர்ந்து கொள்கிறாய்
இந்த 'ஐ' போல.
****************
நீட்டலளவை
நிறுத்தலளவை
முகத்தலளவை
இவற்றுள்
எதைக்கொண்டு
அளக்க நம்
காதலளவை?
******************
செவ்வாயை அடைந்ததிற்கு
விழா எடுக்கலாம் என்றால்,
இன்னும் இலக்கை
எட்டவே இல்லையாம்.

No comments:

Post a Comment