"சார் கொஞ்சம் பேனா கொடுங்க. ஃபில் பண்ணிட்டு தரேன்"
DD எடுக்க அமௌன்ட்டை எழுதி விட்டு நிமிர்ந்து பார்த்தேன்.
"சார் பேங்க் குக்கு வரிங்க. ஒரு பேனா கொண்டு வரமாட்டிங்களா?"
சிடுசிடுத்தேன்.
கேட்டவர் முறுவலித்தார்.
சீக்கிரம் எழுதிட்டு கொடுங்க.
பக்கத்தில் இரண்டு பேர் அவரை பரிதாபமாக பார்த்தார்கள்.
'என்ன மனிதர்கள் இவர்கள். ஓர் இடத்திற்கு செல்லும்போது என்னெனென தேவைப்படும் என்று கூடவா தெரியாது. என்ன படித்து என்ன பயன்?'
DD எடுத்துக்கொண்டு மறக்காமல் பேனாவை வாங்கிக்கொண்டு வெளியேறினேன்.
வெளியே வந்து பைக் ஸ்டார்ட் செய்கையில் என் கைப்பேசி அழைத்தது.
மனைவிதான்
'இவ ஒருத்தி'
"என்னடி?"
"இப்ப எங்க இருக்கிங்க?"
"ம் எமலோகத்தில"
"சரி அங்கேருந்து நம்ம மணியக்காரர் ஆபிஸு பக்கம்தான். போய்ட்டு பையனுக்கு சாதி சான்றிதழ் வாங்க எழுதிகொடுத்துட்டு வாங்க"
'என்ன தெனாவெட்டு எமலோகத்துக்கு பக்கம்தான் மணியக்காரர் ஆபிஸாம்,மணியக்காரர்களை தூக்கி பலவருடங்கள் ஆனாலும் கிராம நிர்வாக அலுவலர்கள் அவளை பொறுத்தவரை மணியக்காரர்தான்"
"ம் சரி"
மணியக்காரர் என்று சொல்லப்பட்ட கிராம நிர்வாக அதிகாரியின் அலுவலகம் ஊரின் எல்லையில் கிட்டதட்ட சுடுகாடு.என் தர்மபத்தினி சொன்னது சரிதான்.
எமலோகத்திற்கு பக்கத்தில் மணியக்காரர்.
அங்கு போய் விவரம் சொல்லி பேப்பர் எடுத்து பையை தடவினால் பேனாவை காணோம்.
எங்க போச்சி?
பேங்க்ல அவன் கிட்ட வாங்கி சட்டைப்பையில் தானே வைத்தேன். அட ராமா பக்கத்தில் கடைகளும் இல்லையே.
மெதுவாக பக்கத்தில் இருந்தவரிடம்
"சார் பேனா கொஞ்சம் கொடுங்க"
"ஏன் சார் ஒரு ஆபிஸ் வந்தா பேனா கொண்டு வரமாட்டிங்களா?"
சுளிர்..,சுளிர்
நான் விட்டெறிந்த பூமாரங் இப்போது என்னை நோக்கி.....,
No comments:
Post a Comment