ஆண் எள் அளிவிற்கு வளர்ந்தால் பெண் நெல் அளவிற்கு வளர்வாள்.
அதனால்தான் விரைவில் மலர்ந்து விரைவில் பலன் கொடுத்து விரைவில் உதிர்ந்தும் போகிறாள்.
ஒரே சம வயதுள்ள ஆணையும் பெண்ணையும் எடுத்துக்கொண்டால் ஆணை விட பெண்ணுக்கு எதையும் விரைவில் கிரகிக்கும் தன்மை சரியான முடிவு எடுக்கும் திறன் பெண்ணுக்கு அதிகமாகவே இருக்கும்.
பொது தேர்வுகளின் முடிவுகளின் இரகசியம் இப்போது புரிகிறதா?
பெண்களின் ஆட்சி கொடி கட்டி பறக்கும் குடும்பங்கள் கொஞ்சம் செழிப்பாகவே இருக்கும்.
~~~~~~~~~~~~~~~~~
என் பத்து வயதிலிருந்தே அந்த குடும்பம் எனக்கு பரிச்சியம்.
கணவரை விட மனைவி அதிபுத்திசாலி. அவர் ஓர் ஆசிரியர். விரைவில் எதையும் முடிவெடுக்க மாட்டார்.
எதுக்கும் ஒரு வார்த்தை கமலத்திடம் கேட்டுக்குறேனே என்பார்.
அந்த அம்மா கெட்டிக்கார அம்மா. பேச்சு பட்டு கத்தரித்தால் போல் இருக்கும்
சொன்னால் சொன்னதுதான். அதி அற்புதமாக குடும்பத்தையும் வியாபாரத்தையும் நிர்வாகம் செய்தார்.
சபையில் வாத்தியார் ஏதாவது உளறி வைப்பார்.அம்மா கணவரின் மரியாதையை குறைக்காமல் ஏதாவது சொல்லி சமாளிப்பாங்க.
எல்லோரும் போன பின் வாத்தியார் தோப்பு கரணம் போடாத குறைதான்.
சும்மா வெளு வெளுன்னு வெளுப்பாங்க அம்மா.,
இதெல்லாம் உங்க வீட்டு கதையன்னு கேட்டா, பிச்சிபுடுவேன் பிச்சி lol
No comments:
Post a Comment