கணவன் மனைவிக்கிடையிலான உறவோ அல்லது நட்போ ஆரம்பத்துல ரொம்ப வேகமா இருக்கும். அதுல விவேகம் துளியும் இருக்காது.
கண்ட கண்ட பினாத்தல்கள் முட்டாள்தனமான பேச்சுகள் எல்லாம் இருக்கும். எத்தனை முட்டாள்தனமாக பேசினாலும் ரசிப்போம். கொஞ்ச நாள்ல சலிப்பு தட்ட ஆரம்பிக்கும்.
கணவன் மனைவி என்றால் அந்த சலிப்பை ஈடுசெய்ய ஒரு பொம்மை வரும்
'இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட..,'
அந்த குழந்தை வந்தபின் எல்லா கவனமும் குழந்தைமேல் போய்விடும்.
குறைகள் மறைக்கப்படும்.அல்லது மறக்கப்படும்.
இப்போது இன்னும் ஒருவருக்கொருவர் அதிக பாசத்துடனும் நேசத்துடனும் நெருங்குவர்.
ஆனால் இருவரின் நட்புக்கிடையே இது சாத்தியமில்லை. அது இருபாலின நட்பாக இருக்கலாம்.ஒரு பால் நட்பாக இருக்கலாம்.
ஆரம்பத்துல வேகவேகமா சாட்டிங் நடக்கும். இல்லை நேரடியான தொடர்பு இருந்தால் ஒன்னா சுத்துவாங்க.
ஆண்களாய் இருந்தால் ஒன்னா போய் தண்ணி அடிப்பாங்க
இல்ல ஒன்னா போய் டீ குடிப்பாங்க.
பெண்களாய் இருந்தால் ஒன்னா கோவிலுக்கு போவாங்க. ஒன்னா போய் ஒரே கலர்ல புடவை வாங்குவாங்க.. இவ வீட்லருந்து அவ வீட்டுக்கு புளிக்குயம்பு பார்சல் போகும்.அவ வீட்ல இருந்து இவ வீட்டுக்கு பார்சல் போகும்.
இந்த நட்பு கொஞ்சநாள்ல சலிக்க ஆரம்பித்து விடும்
நம்மை இவன்/இவள் உண்மையா நேசிக்கிறானா/நேசிக்கிறாளான்னு..
இந்த கட்டத்தை வென்று விட்டால் அந்த நட்பு காலகாலத்திற்கு வென்று நிற்கும்..
நாமும் வெல்வோமா?
No comments:
Post a Comment