Tuesday, November 4, 2014

காசி என்கிற காசிநாதன்

காசி என்கிற காசிநாதன்.
***-----------------***

தேரா துபாயின் கடைத்தெருக்களை வலம் வந்து கொண்டிருந்தேன்.நான் அனாவசியமாக ஊர் சுற்றுபவன் அல்ல.
கிடைக்கும் ஒருநாள் வெள்ளிக்கிழமையை வீனாக்காமல் ஓய்வு எடுப்பவன்.
சரி இன்று கோவிலுக்கு போய்வரலாம் என கிளம்பி விட்டேன்.

காலை நேரத்தில் இரகசியமாய் காதை கடிக்கும் விலைமாதர்களின் மாமாக்களை புறம் தள்ளி குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் ஒரே சீராக நான் போக வேண்டிய இடத்தை குறி வைத்து நடந்தேன்.

அரைக்கால் சட்டையும் கையில்லா பணியனும் அணிந்த மேற்கத்திய யவதிகளை இரசித்தபடி வேகமாய் நடை போட்டேன்.

திடிரென்று,தமிழ் குரல் அதுவும் நம்ம ஊர் வாடை.

"பங்காளி"

இது பழக்கப்பட்ட குரலாயிற்றே?

மூச்சிரைக்க எனை நோக்கி ஓடி வந்தவன் காசி என்கிற காசிநாதன்.

நானில்லாமல் என் வீட்டை காண்டிராக்ட் எடுத்து கட்டித்தந்தவன்.

"என்னடி இது இப்படி இருக்கு.எதுக்கு இங்க தேவையில்லாமல் சுவிட்ச் போர்ட்.
என்ன இது பூச்சு? பொம்பளை என்று ஏமாத்திட்டானா?

"அதான் இப்படி பண்ணிட்டாரு. அதான் 2065பாக்கி வச்சிருக்கேன். குறை வேலையை முடித்து விட்டு உன் காச வாங்கிக்கன்னு கறார சொல்லிட்டேன்" -இது மனைவி

"பாவம் கொடுத்துரு."
"குடுப்போம் குடுப்போம் குடுத்துட்டா அப்பறம் அந்த கமினாட்டி வரமாட்டான்"

"என்ன அவன மரியாதை இல்லாம பேசுற?"

"ம்.அது என்னா எங்கிட்ட வாயடிக்குது"

உண்மையில் காசி மிக குறைந்த செலவில் என் வீட்டை கட்டி தந்திருந்தான். ஒரே ஊர்க்காரன்.ஒரு வகையில் பங்காளி முறை

அதிக நாட்களுக்கு பிறகு இப்போது அவன்.

"என்ன காசி எங்க இருக்க? வீட்ல சொல்லவே இல்ல?நீ வந்திருக்கன்னு"

"யாரு உன் பொண்டாட்டிதானே நல்லா சொல்லுமே.பங்காளி எனக்கு கொஞ்சம் பேலன்ஸ் பாக்கி இருக்கு"

"இன்னும் குடுக்கலயா?நான் குடுக்க சொன்னேனே."

"என் தம்பி இங்க புதுசா வந்து இருக்கான்.அவன்கிட்ட பணமில்ல.வீட்டுக்கு போன் பேச முடியல.சாப்பிட காசு இல்லன்னு அழுவுறான்.எனக்கு தரவேண்டிய பணத்தை அவன் கிட்ட கொடேன்"

"சரி தரேன்.வா சாப்பிடலாம்"

"இல்ல பங்காளி நான் சாப்புட்டேன். நான் வரேன்"

"எங்க போற பங்காளி?வாயேன் பர்துபாய்.கோவிலுக்கு போய்ட்டு வரலாம்"

என்னை செறுக்க பார்த்தான்

"என்னை கோவிலுக்கெல்லாம் கூப்பிடாதே. நான் வரேன்"

கூட்டத்தில் மறைந்து போனான்.

அப்போது என் மொபைல் சினுங்கவே

தூக்கிப்போட்டாற் போல் விழித்துக்கொண்டேன்.

அடச்சே கனவா?

காசி இங்கிருக்கிறானா?
எதற்காக கனவில் வந்தான்?

மொபைலில் அழைத்தது மனைவி.

வந்த அழைப்பை துண்டித்து விட்டு நான் இங்கிருந்து அழைத்தேன்.

"என்னம்மா?"

"என்ன தூக்கமா?"

"ம்.நல்லா இருக்கியா? சேதி தெரியுமா? காசி...."

"ஆமாங்க சொல்ல மறந்துட்டேன்.செத்து இரண்டு நாளாச்சு. வீடு கட்றப்ப செவுத்துக்கு தண்ணி அடிச்சிருக்காரு. தண்ணி கரண்டு கம்பில பட்டு தூக்கி போட்ருச்சி. கொஞ்சம் கூட தாமதிக்கல"

"பாவம்.இங்க என் கனவுல வந்தாண்டி."
விபரங்களை சொன்னேன்.

அதிர்ச்சியுற்றவள்

"நான் உடனே தரவேண்டிய பணத்த குடுத்துட்டேன்.அன்னைக்கு சாவு செலவு நான் குடுத்த காசுதான். "

"ம்"

"வேனா அவரோட தம்பி அங்கதான் இருக்கான்.கம்பெனி சரியில்லன்னு அவன் பொண்டாட்டி ஒரு நாள் அழுதா.வேனா ஏதாவது உதவி செய்ங்க.பாவம்."

"சரி"

நான் உடனே காசியின தம்பி் முகவரியை தேட ஆரம்பித்தேன்.உதவி செய்ய.

‪#‎கதை‬ முற்றிலும் கற்பனையே.நேற்றைய கனவின் பாதிப்பில்.

No comments:

Post a Comment