கண்ணுக்கு
தெரிவதை விட கண்ணுக்கு தெரியாதவைகள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன.
உதாரணம்: மனசு.அன்பு மற்றும் கடவுள்
இது உண்மைதான். கண்ணுக்கு தெரியாதவைகள் பல ஆட்டிபடைக்கின்றன நம்மை.அதான் அவங்களே உதாரணம் கொடுத்துட்டாங்க.
மனசு: தன்னிலை. முதல்ல நம்மை ஆட்டி படைப்பது நம்ம மனசு.
அங்க போகாத. நிறைய ஆபத்து இருக்குன்னு மூளைக்கு தெரியும்.ஆனா மனசு சொன்னபேச்ச கேக்காது.
அன்பு: முன்னிலை
இன்னொருவர் அன்பென்ற பெயரில் நம்ம மனசுல புகுந்து ஆட்டி படைப்பது.
டேய் அத எடுடான்னு கோபமா சொன்னா போடா வெண்ணன்னு போய்டுவோம்.
அத கொஞ்சம் எடுடா செல்லம்ன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னா தட்டாமல் செய்துடுவோம்.
அடுத்து,
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் வாதம் செய்யாமல் கடந்து போகலாம்.
கடவுள்: படர்க்கை அல்லது மூன்றாம் நிலை. தன்னிலையையும் முன்னிலையையும் இயக்க செய்வது. இதை கடவுள் எனலாம் இயற்கை எனலாம்.எதுவாக இருந்தாலும் நம்மை மீறிய சக்தி.
6:10வர வேண்டிய பேருந்துக்கு மிகச்சரியாக 6மணிக்கு வந்து நின்றால் அன்றைய தினம் 5:59க்கு அந்த பேருந்து சென்றிருக்கும். அல்லது உங்கள் நிறுத்தத்தில் நிற்காமல் போகலாம்..அல்லது நடுவழியில் பிரேக்டவுன் ஆகியிருக்கலாம்.
காரணம் எதுவாக இருந்தாலும் அது உங்களை பாதிக்கும் நிகழ்ச்சி.இப்பொழுது உங்கள் பயணம் தடைபடலாம்.மிகப்பெரிய வேலைக்கான நேர்முகத்தேர்வை நீங்கள் இழக்க நேரிடலாம்.
யார் கண்டது இதை விட சிறப்பான வேலைகூட காத்திருக்கலாம்.இல்லை இதைவிட மோசமான வேலைதான் உங்களுக்கு என நிர்ணயம் ஆகியிருக்கலாம்.
ஆனால் இதற்கு காரணம் நீங்கள் இல்லை.
பின் அதற்கு என்ன பெயர்?
No comments:
Post a Comment