Thursday, November 6, 2014

பூக்கள் விற்பனைக்கல்ல

ஒரு படைவீரன் தன் கடமையை மறந்து அசந்து உறங்கிக் கொண்டிருந்தான். அவன் கனவில் எதிரிப்படைகளை தான் ஒருவனே எதிர்த்து போரிடுவது போல் கனவு.

அதேநேரம் தன்படைவீரர்களை பார்வையிட வந்த தளபதி இக்காட்சியை கண்டு கோபத்தில் கர்ஜிக்கிறார்.

கனவு கண்டு கொண்டிருந்த படைவீரன் சத்தம் கேட்டு உண்மையில் தன் எதிரே எதிரிப்படைகள் வந்து விட்டதாகவும் இப்போது தான் ஒருவன்தான் சமாளித்தாக வேண்டும் என நினைக்கிறான். உடனே தாமதிக்காமல் பக்கத்தில் இருந்த பத்து பேர் சேர்ந்து தூக்கினாலும் தூக்கமுடியாத பீரங்கியை எடுத்து சுட ஆரம்பிக்கிறான்.

எந்த சக்தி அந்த பீரங்கியை தூக்க வைத்தது?

*****************

நீங்கள் உங்களுக்கு அத்தனை பழக்கமில்லாத ஒருவர் வீட்டுக்கு முன் அறிவிப்பு செய்து விட்டு விருந்தினராக போகிறீர்கள்.

அப்போது நீங்கள் அங்கே இயல்பான காட்சியை காண மாட்டீர்கள். பொருட்கள் அழகாக அடுக்கப்பட்டு அவரவர் முகத்திலும் செயற்கையான புன்னகையை வரவழைத்துக்கொண்டு. குழந்தைகள் குறும்புத்தனம் இல்லாமல் செயற்கையாக இருப்பார்கள்.
அங்கே நீங்கள் வேண்டாத விருந்தினர்தான்.

அதேசமயம் சொல்லாமல் திடிரென்று போய் பாருங்கள்.

சுவரில் கிறுக்கும் குழந்தைகள்
அழுக்கேறிய புடவையுடன் மனைவி
கைலியுடன் கணவன்
இறைந்து கிடக்கும் புத்தகங்கள்
கழுவாத காபி தம்ளர்கள் மேஜையின் மேலே
அதன் பாட்டிற்கு ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
மூலையில் குவிக்கப்பட்டிருக்கும் அழுக்கேறிய துணிகள் இவைகள்தான் உங்களை வறவேற்கும்.

உங்களை கண்டதும் அவசர அவசரமாக அகற்ற முனைவார்கள்.

அப்போது ஒரே ஒரு வார்த்தை சொல்லிப்பாருங்கள். அந்த வார்த்தையில் நெகிழ்ந்து போவார்கள்.அப்பறம் என்ன ராஜ உபசாரம்தான்.

அந்த மந்திர வார்த்தை:

"குழந்தைங்க இருக்குற வீடு இப்படித்தானே இருக்கும்.எங்க வீட்ல வந்து பாருங்க.இதை விட மோசமா இருக்கும்.விடுங்க பரவால்ல"

:)

No comments:

Post a Comment