தன் குதிரையை யார் பறக்க வைக்கிறார்களோ அவர்களுக்கு தகுந்த சன்மானம் அளிக்கப்படும், தவறினால் மரனதண்டனை என ஓர் அரசன் அறிவித்தான்.
'அது எப்படி குதிரை பறக்கும்' யாரும் முன்வரவில்லை. ஒரு பிச்சைக்காரன் மட்டும் முன்வந்தான்.
"அரசே உங்கள் குதிரையை நான் பறக்க செய்கிறேன்.அதற்கு எனக்கு ஒருவருட காலஅவகாசம் வேண்டும். நான் கேட்கும் வசதிகளை செய்து தரவேண்டும்"
அரசனும் சம்மதித்தான் பிச்சைக்காரனின் நண்பன் கேட்டான்.
"அதெப்படி குதிரையை பறக்க செய்வாய்.மீறினால் அரசன் உன்னை கொன்று விடுவான்."
"நானோ எந்த ஆதரவும் இல்லாமல் பிச்சை எடுத்து வாழ்கிறேன். நான் கேட்டிருப்பது ஒருவருடகால அவகாசம். இந்த ஒருவருடத்தில் நான் சகல சந்தோசங்களையும் அனுபவிப்பேன்.என்னால் குதிரையை பறக்க வைக்க முடியாது.இந்த ஒருவருடத்தில் எதிரி நாட்டு அரசன் நம்நாட்டை பிடிக்கலாம். இல்லை குதிரை இறந்து போகலாம். இல்லை அரசன் இறந்து போகலாம். இல்லை நானே கூட இறந்து போகலாம்"
"இவற்றில் எதுவும் நடக்காவிட்டால்?"
"நானே குதிரையை கொன்று விடுவேன்."
No comments:
Post a Comment