இரட்டைவரி நோட்டு-2
இரட்டைவரி நோட்டு பெயர்காரணம் தெரியுமா?
குழந்தைகள் சிலேட்டை தாண்டி நோட்டுக்கு வரும்போது இந்த இரட்டைவரி நோட்டில்தான் எழுதி பழகுவார்கள்.
எந்த எழுத்து இருகோடுகளுக்குள் அடங்க வேண்டும்.எது கீழே இறங்கி வரலாம்.எது கோட்டின் மேல் போகலாம் என பழக்கப்படுவார்கள்
இங்கே தம்பதிகளுக்குள் எங்கே அடங்குவது எங்கே திமுறுவது என்று தெரியாததால் இத்தனை பிரச்னைகளும்
அப்ப உங்க வீட்ல சண்டை வராதான்னு கேக்காதிங்க
நித்தம் நாலு சண்டை வரும்.
அத்தனை ஆதர்ஸ தம்பதிகள் (lol)
~~~~~~~~~
ஊரே போற்றும் குடும்பம். கணவர் நாலைந்து ஏஜன்ஸி எடுத்து பணம் கொட்டியது.
இவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும் வரை என்னை தூக்கி வைத்து கொஞ்சுவார்களாம்
குழந்தையில நான் அத்தனை அழகாய் இருப்பேனாம் lol
ஆனால் இவர்களுக்குள் என்ன பிரச்னை என்று தெரியாது. எங்கள் பங்காளி முறை. பெரியம்மா பெரியப்பா.
பெரியம்மா அத்தனை வாஞ்சை. பார்த்தால் மீனாட்சியே நேரில் நிற்பது போல் இருக்கும்.பெயரும் கூட அதுதான்.
இரண்டு குழந்தைகள்.இவர்கள் எப்போது பேச்சை நிறுத்தினார்கள் என்று தெரியாது.
ஆனால் கணவனுக்கு வேண்டிய அத்தனை பணிவிடைகளும் சரிவர நடக்கும். முதுகு தேய்ப்பது உள்பட.
எதாவது விசயம் என்றால் குழந்தைகள் தூது போவார்கள்.
இவர்களை கடைசி வரை சேரவிடாமல் செய்த கூணி பெரியப்பாவின் அம்மா.
ஏதாவது விசேசம் என்றால் அவர் முன்னால் செல்வார். அம்மா குடுகுடுன்னு ஓடுவாங்க.
போன இடத்தில் அக்கடான்னு அம்மாவால் இருக்க முடியாது.
கண்கள் புருசனையே வட்டமிட்டுக்கொண்டு இருக்கும்.
அவர் வீட்டுக்கு புறப்பட்டால் அம்மா திரும்ப குடுகுடு...
இவர்கள் அறுபதாம் கல்யாணம் எல்லாம் செய்து கொண்டார்கள்.
ஊராரின் கண்களுக்கு இவர்கள் சிறந்த தம்பதிகள்.
எங்க வீட்ல எப்படி தெரியுமா?
ஏதாவது உள்ளூர் விஷேசத்திற்கு சென்றால்,
"நீங்க வீட்டுக்கு போங்க. நான் கொஞ்சம் நேரம் கழிச்சி வரேன்"
வேறென்ன பண்றது?
நீ வந்தா வா வராட்டி போன்னு வந்துடவேண்டியதுதான்.(கொஞ்ச நேரம் ஜாலியா இருக்கலாமுல்ல?)
No comments:
Post a Comment