நான் நானாக இருக்கவே முயற்சிக்கிறேன்.
ஒருபோதும் யாருக்காவும் எதற்காகவும்
எனை மாற்றிக்கொள்வதில்லை
என் ஆணவம் என் கர்வம்
என் தன்மானம் எனை காக்கும்
கவசங்கள்
இவற்றை ஒருபோதும் யாருக்காகவும்
விட்டுகொடுப்பதில்லை.
இதனால் நீங்கள் எனை நெருங்கி வரலாம்.
இதனாலும் நீங்கள் எனை விட்டு விலகலாம்.
இதனால் எல்லாம் நான் மனம்
உடைந்து போவதில்லை.
காலசக்கரத்தில் நம்பிக்கையெனும்
கைப் பற்றி பயணிக்கிறேன்.
விருப்பமிருப்பின் என் கை கோர்த்து வரலாம்.
நீங்கள் எனை தொடராவிட்டாலும்
என் பயணம் தொடரும்
என் பயணத்தில் நானே பயணி
நானே மாலுமி
எனது வெற்றிகளும் தோல்விகளும்
எனையே சாரும்.
எனக்கு த்தெரியும்
ஒருநாள் எனை நீங்கள் புரிந்து கொள்வீர்களென.
இலக்கில்லாமல் நான் பயணிப்பதில்லை.
எனது இலக்கு ஓராயிரம் வெற்றிகளை குவிப்பதில்ல
ஒரு தோல்வியும் அடையக்கூடாதென்பதே.
இதோ வழமை போல்
எனது பயணம் தொடர்ந்தபடி
அது யாருக்காகவும் காத்திருக்காது
எந்த தடை வரினும் தயங்கி நிற்காது.
நம்பிக்கை இருந்தால் நீங்கள் என் கையைப் பற்றுங்கள்.
No comments:
Post a Comment