Wednesday, November 19, 2014

கடவுளும் நானும்

நாங்கள் நண்பர்களல்ல
எப்போதும் இணைந்தே இருக்க.

நாங்கள் விரோதிகளுமல்ல
எப்போதும் பிரிந்தே இருக்க.

எங்களுக்குள் வரவுசெலவு இல்லை
எங்களுக்குள் பிணக்கம் வர

நாங்கள் வேலையற்றவர்களல்ல
வெட்டிக்கதைகள் பேச

நாங்கள் சோம்பேறிகளல்ல
ஒருவர் கையை ஒருவர் எதிர்பார்த்து இருக்க.

நாங்கள் அவரவர் கடமைகளை சரியாக செய்கிறோம்.

#கடவுளும் நானும்

No comments:

Post a Comment