Thursday, November 6, 2014

வாழ்க்கை

ஒரு சமதரையில் வைக்கப்பட்டுள்ள ஐந்து மீட்டர் நீளமும் ஒரு அடி அகலமும் உள்ள மரப்பலகையில் காலை தரையில் வைக்காமல் உங்களால் நடக்க முடியும்தானே?

இப்போது அந்தப்பலகை ஒரு அடி உயரத்தில்.
இப்போதும் உங்களால் அதில் நடக்க முடியும்தானே?

அடுத்து அந்த பலகை ஒரு மீட்டர் உயரத்தில்

இப்போது கூட சமாளித்து நடந்து விடுவீர்கள்தானே?

இப்போது அந்தப்பலகை
மூன்று மீட்டர் உயரத்தில் வைப்போமா?

இப்போது உங்களால் பயமில்லாமல் நடக்க முடியாது.

கொஞ்சம் பயத்தோடு சமாளித்து நடந்து விடுவீர்கள்தானே?

இப்போது அந்தப் பலகை பத்து மீட்டர் உயரத்தில்.

இப்போது உங்களால் ஏதாவது ஓர் உதவி இல்லாமல் நடக்க பயமாக இருக்கும்தானே?

தரையில் இருந்த அதே பலகைதான்.
ஆனாலும் உயரம் கூட கூட பயம் வருகிறது.

ஒரு மீட்டர் உயரத்தில் கீழே விழுந்தாலும் அடிபடாது என்ற தைரியம். மூன்று மீட்டர் உயரத்தில் அடி பட்டாலும் லேசாகத்தான் படும் என்ற நம்பிக்கை.
பத்து மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்தால் நிச்சயம் நமக்கு பேராபத்து இருக்கும் என்று நம் மூளை சொல்கிறது.

பலகை தரையில்தான் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு நம்மால் நடக்க முடிவதில்லை.

வாழ்க்கையில் கீழே இருப்பவன் எதைப் பற்றியும் கவலைப் படுவதில்லை.அவன் தரையில் வைக்கப் பட்ட பலகையில் நடப்பவன்.

ஆனால் வாழ்க்கையில் மேலே போக போக......

No comments:

Post a Comment