Monday, November 17, 2014

நடுவுல கொஞ்சம் நட்பைக் காணோம்


ஒரு பதிவில்  பின்னூட்டம் இடுகையில்தான் அவன் அறிமுகமானான்.

தான் ஒரு இன்ஜினியர்  என்று அறிமுகபடுத்திக்கொண்டான். உங்கள் நட்பில் பெருமை அடைகிறேன் என்றான்.
இன்னும் சிலதினங்களில் நானும் கத்தார் வருவேன்  என்றான்.

அவன் இங்கு வந்து சிலமாதங்கள் கழித்து  பக்கத்து தெருவில் இருப்பதாக அறிந்து பார்த்து விட்டு வர கிளம்பினேன்.

ஒரு மணி நேரம்  தேடி அலைந்து அவன் இருப்பிடம் கண்டு பிடித்து சென்றால் அறையில் உட்பார்ந்த படியே அலைபேசியில் வழி சொன்னான்.

மரியாதைக்காக கூட வெளியே வில்லை. என்னைப்பற்றி அவன் கற்பனை செய்து வைத்திருந்த உருவத்திற்கும் நேரில் பார்த்த உருவத்திற்கும் துளியும் சம்பந்தம் இல்லை என நினைக்கிறேன்.

என்னைப்பற்றி வானாளவ  கற்பனை செய்து இருந்து இருக்கலாம். என்னை ஒரு சாதாரணனாக அவன் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை என நினைக்கிறேன்.

விடைபெறும் போது கூட  மரியாதைக்காக வெளியே வந்து வழிஅனுப்ப வில்லை.
ஒன்றும் மட்டும் புரிந்தது.அவன் தேடலில் நான் இல்லை.

அதன்பிறகு நான் அவனை சந்திக்கவே இல்லை.

No comments:

Post a Comment