Friday, November 14, 2014

அவளருவியும் மலையருவியும்

உதிர்த்துக்கொண்டே
இருக்கிறாய்
கோர்த்துக்கொண்டே
இருக்கிறேன்
உன் அழகை.

அருவியாய்
கொட்டுகிறாய்
தெப்பமாய்
நனைகிறேன்
உன் அன்பில்.

பூமழையாய்
பொழிகிறாய்
வாசமாய்
மலர்கிறேன்.

கொஞ்சும் உன்
அருவியை
நிறுத்தி வையேன்,
கொஞ்சம்
மலையருவியையும்
ரசிப்போம்.

No comments:

Post a Comment