"நல்ல ஸ்பீடா வண்டி ஓட்றிங்களே. ஏய் நான் இருக்கேனுதானே"
"என்னடி அப்படி சொல்லிட்டே. அய்யா எதிலும் ஸ்பீடுதான்"
"ச்சீ... போங்க"
கௌதமும் அஸ்வினியும் திருமணம் முடித்து ஒரு வாரம் கூட முடியவில்லை. கௌதமின் மாமா வீட்டுக்கு விருந்துக்கு போய் விட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்கள்.
புதிய பைக். புதிய மனைவி கேட்கவா வேண்டும்.
அந்த தேசிய நெடுஞ்சாலையில் புதிய பைக் பறந்தது.
கெஞ்சலும் கொஞ்சலுடனே..,
கௌதம் திரும்பி மெதுவாக அஸ்வினியின் காதில் என்னமோ கிசுகிசுத்தான்.
"ம்.. போங்க"
பொய்யாய் கணவனின் முதுகில் குத்தினாள்.
அதே நேரம் பின்னால் வேகத்துடன் வந்த ட்ரெய்லர் ஒன்று அவர்களை கடக்க முயன்ற போது கௌதம் பைக்கை தவற விட்டான்.
ட்ரெய்லர் பைக்கில் வேகமாக மோதி கௌதம் சாலையின் ஓரத்தில் தூக்கியெறியப்பட்டான்.
அஸ்வினி பைக்கோடு ட்ரெயிலரின் அடியில் போனாள்.
ஒரிரு வினாடியில் ட்ரெய்லர் அவளை கடந்து போனது.
தூக்கியெறியப்பட்ட கௌதம் ஓரிரு சிராய்ப்பு முழுசாக எழுந்து வந்தான்..
ட்ரெய்லரின் அடியில் சென்ற அஸ்வினி லேசான காயத்துடன் எழுந்து வந்தாள்.
புதிய பைக் மட்டும் முகம் சுளித்து மடங்கி கிடந்தது.
உடனே சிறுகூட்டம் அங்கு கூடியது.
எப்படி இந்த விபத்தில் இருந்து தப்பினார்கள்.எல்லோருக்கும் ஆச்சரியம்.
கௌதம் கடவுளுக்கு நன்றி சொன்னான்.
அடுத்து பைக்கை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு முதல் உதவிக்காக அடுத்து வந்த ஆட்டோவை பிடித்தனர்.
ஏற்கனவே அதில் இரு பயணிகள். இவர்களையும் சுமந்த ஆட்டோ சீரான வேகத்தில் பயணித்தது.
அடுத்த ஐந்து நிமிடத்தில் அதன் பின்னால் வந்த இன்னொரு ட்ரெய்லர் ஆட்டோவில் மோதி தூக்கியெறிந்தது. அதில் பயணம் செய்த அத்தனை பேரும் அதே இடத்தில் இறந்தனர், கௌதமை தவிர.
கௌதம் மண்டை பிளந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். நினைவு மட்டும் திரும்பவே இல்லை....மனைவி இறந்தது தெரியாமல் உயிருள்ள பிணமாக கிடக்கிறான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
#இது ஓர் உண்மைச்சம்பவம்.பெயர்கள் கற்பனை.
No comments:
Post a Comment