Saturday, November 22, 2014

இரட்டைவரி நோட்டு-4

இறைவன் யார் யாருக்கு எங்கு முடிச்சி போட்டு வைத்திருக்கிறான் என்பது பரம இரகசியம்.

அது மிகப்பெரிய குடும்பம். பெண்கள் அனைவரும் அந்த காலத்திலியே நன்றாக படித்து அரசாங்க வேலையில் உள்ளவர்களை திருமணம் செய்து கொண்டனர். அதைபோல் ஆண்மக்கள் அனைவரும் நன்கு படித்து வேலையில் உள்ள பெண்ணாக திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் கடைசி பிள்ளை மட்டும் படிப்பு ஏறாமல் கொஞ்சம் அம்மாஞ்சியாய் போய் விட்டான்.

எங்காவது ஒரு குறை இருந்தால் அதை சமமாக்க ஏதோ ஒரு வகையில் ஒரு நிறையையும் வைத்து விடுவானே இறைவன்.

கடைசி வாரிசு படிக்க வில்லையாததால் அண்ணன்மார்கள் தம்பிக்காக பரம்பரை நிலங்களையும் மிகப்பெரிய அந்தக்கால ஓட்டு வீட்டையும் விட்டு கொடுத்தனர்.

அந்தக்கால நாட்டு ஓடு வேய்ந்த வீடு அதே பொலிவுடன் இன்னும் உள்ளது.

படிக்காத மக்கு பிள்ளைக்கு வாய்த்த பெண் நன்கு படித்து ஆளுமை தன்மை உள்ளப்பெண்.

இவங்கள தங்கை என்பதா அல்லது என் மனைவிக்கு சித்தப்பாவின் மனைவி என்பதால் மாமியார் என்பதா என புரியாததால் முறை சொல்லி அழைக்க மாட்டேன்.

மக்கு கணவனை வைத்துக்கொண்டு இருக்கும் நிலங்களை வைத்து பிழைப்பு நடத்தி இப்போது இவர்கள் இருமகன்கள் இன்ஜினியர்கள்.

இந்த பெண்ணைத்தவிர வேறு யார் வந்திருந்தாலும் அவனை மனிதனாக்கி இருக்க முடியாது.
(இது எனக்கும் பொருந்தும்)
~~~~~~~~~~~~~~~

சிலநாட்கள் முன் என் மனைவி சொன்னது,

"எனக்கு முன்னாடி நீ செத்து போய்டுயா. நான் முன்னாடி செத்து போனா நீ என்ன கஷ்டபடுவியோ?"

எத்தனை பெரிய வார்த்தை

ஆண்கள் கடைசி காலத்தில்தான் மனைவியின் அருமையை உணர்ந்து கொள்கின்றனர்.

No comments:

Post a Comment