Wednesday, November 5, 2014

"உனக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்னு தரபோரேன்டா"
-எனக்கு தமிழ் என்கிற தமிழரசி போன் செய்தாள்.

"என்னடி முத்தம் கித்தம் தரபோறியா?"

அடி படவா ராஸ்கல். என் பொண்ணு கேட்டாள்னா பிஞ்சி போன செருப்பாலே அடிப்பா"

"சரிசரி எப்ப வர?

"நாளைக்கு வரேண்டா. கிப்ட் வாங்க ரெடியா இரு"

"ஓகே கருவாச்சி"

"டாய் என்ன வாய் நீளுது"

மேலும் சில விசயங்கள் சொன்னாள். அவள் சொல்ல சொல்ல சந்தோசம் பிடிபடவில்லை.
சின்ன பிள்ளையை போல துள்ளி குதித்தேன். என் வயதையும் மறந்து.

தமிழ் என்னோடு சிறு வயதில் ஓடிபிடித்து விளையாடிவள். பள்ளியிறுதி வரை ஒன்றாக படித்தவள். அவளுக்கு கல்யாணமாகி இப்போது கல்யாண வயதில் பெண் அவளுக்கு. இருந்தாலும் எங்கள் பழைய நேசம் மாற வில்லை.

அவள் வரவிற்காக காத்திருந்தேன்.

அடுத்த நாள் சொன்னபடி அவள் கார் என் ஆபிஸ் முன்பு. முதலில் அவள் இறங்கினாள்.

இரண்டாவதாக இறங்குவது?

அமுதா

என் அத்தை மகள். இருவரும் மனதார காதலித்தோம். சிறுவயதில் எனக்கு அமுதாதான் என்று முடிவும் செய்திருந்தார்கள்.

எல்லாம் என் அப்பா இருக்கும் வரை. அப்பா இறந்த பிறகு மாமா எங்களை மதிப்பதே இல்லை.
என்னால் கல்லூரியில் படிக்க வசதி இல்லை.
நிலையாக ஒரு வேலை இல்லை.

ஆனால் அமுதா மட்டும் படித்துக்கொண்டே போனாள்.

"மாமா நான் எத்தனை படித்தாலும் உங்களத்தான் கட்டிக்குவேன். நீங்க எங்கப்பா கிட்ட பொண்ணு கேளுங்க"

"ஏன்டா உருப்படியா ஒரு வேல இல்ல. பொண்ணு கேக்கதோ. முதல்ல பொழைக்கிற வழிய பாருடா. நான் என் பொண்ண மேல படிக்க வைக்க போறேன்"
-இது மாமா

எனக்கு ரோசம் தாங்க முடியவில்லை, அடுத்த நாளே பாம்பே புறப்பட்டேன்.

அம்மா எனக்காக கடைசியாக இருந்த நிலத்தை விற்றாள்.
அந்த பணத்தை கொண்டு வெளிநாடு செல்ல திட்டம்

விசா வந்து டிக்கட் பாஸ்போர்ட் வாங்கும் போது, அங்கிருந்த ஆபிஸ்பாய் ஒரு கடிதம் கொடுத்து தன் மச்சானிடம் கொடுத்து விட சொன்னான்.

அது போதை மருந்து என தெரியாமல் வாங்கி, சவுதி கஸ்டமஸில் பிடிபட்டு ஏழு வருடம் சிறைதன்டனை அனுபவித்து, ஊருக்கு வந்தால்

அம்மா இறந்து விட்டாள். தமிழரசி கல்யாணம் ஆகி வடக்கே எங்கயோ போய் விட்டாள்.

அமுதா US போய் விட்டதாக சொன்னார்கள்.
அவளை பற்றி வேறு எந்த விபரமும் கொடுக்க மறுத்து விட்டார்கள்.

அங்க ஓடு இங்க ஓடி இதோ இங்கே சொந்தமாக டிராவல்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் பிஸ்னஸ்.

ரொம்ப நாளைக்கு அப்பறம்தான் தமிழரசி முகவரியை கண்டு பிடித்தேன்.

இப்போது எனக்கு வயது 40

இருவரும் ஆபஸினுள் வந்தார்கள்
அமுதா என்னிடம் எதுவும் பேசவில்லை.
ஏதோ தவறான இடத்திற்கு வத்தவள் போல் இருந்தாள்

"டேய் சன்முகம் இவளுக்கு நம்ம பக்கத்துல இடம் வாங்கி வீடு கட்டனுமாம். அதான் உன்ன பாக்க வந்தோம்"

"ஏன் உங்க பிரண்டு பேச மாட்டாங்களா?"

அமுதாவிடம் இருந்து எந்த சலனமும் இல்லை

"சரி வாங்க இடம் காட்டுறேன். உன் பிரண்டுக்கு பிடிச்சிருந்தா வாங்கட்டும்"

"அப்பா ஸ்கூலுக்கு போய்ட்டு வரேன்பா" என்ற படி என் மகன் வந்தான்.
அமுதா என் மகனை கேள்விகுறியோடு பார்த்தாள்.

அப்போது அமுதாவுக்கு போன்

"அம்மா இரண்டு நாள்ல வந்துறுவேன்மா. கவல படாதே. "
என்றது என் காதிலெ விழுந்தது

"ஏன்டி கருவாச்சி உங்க பிரண்டுக்கு பொண்ணு இருக்கா?"

"ஏன் உனக்கு பையன் இருக்கும் போது அவளுக்கு பொண்ணு இருக்க மாட்டாளா?"

நான் ஒன்றும் பேச வில்லை. சரி வாங்க இடம் பாக்கலாம்

இடத்தை சுற்றி காட்டினேன்.
பார்த்துக் கொண்டே வரும்போது தமிழ் மட்டும் தனியாக போய் எங்கேயோ பார்த்து கொண்டிருந்தாள்.

இப்போது நானும் அமுதாவும் தனிமையில்.

நான் மெதுவாக கேட்டேன்.

"நல்லா இருக்கியா அமுதா?"

அவ்வளவுதான் குலுங்கி குலுங்கி அழுதாள்.

அவள் அழட்டும் என்று காத்து இருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து பேச ஆரம்பித்தாள்

"என்ன மறந்துட்டியாடா?"

"______________"

"SORRY'

"எதுக்கு சாரி?"

"நான் உங்கள மரியாதை இல்லாம பேசிட்டேன்"

"போதும் அமுதா நமக்குள் இந்த ஊமை நாடகம். நான் இப்பவும் உனக்காகத்தான் காத்து இருக்கேன். இத்தன வருசம் நம்ம வாழ்க்கைய வீனாக்கி கிட்டோம். இப்ப சரின்னு சொல்லு இரண்டு பேரும் கல்யாணம் பன்னிக்கலாம்"

அங்கே மௌனம் சில வினாடி..,..
அப்பறம் கேட்டாள்
"நம்ம குழந்தைகள்?"

"போதுமடி உன் நாடகம். நமக்கு வளர்ப்பு பிள்ளைகள்தானே. அவங்க நம்ம கூடவே இருக்கட்டும். தமிழ் எல்லா விபரமும் எங்கிட்ட சொல்லிட்டா. ஏன் உங்கிட்டயும் சொல்லி இருப்பாளே?"

"ம்ம்ம்,... சொன்னா"

"அப்பறம் என்ன என்றபடிஇரண்டு கைகளையும் நீட்டினேன்"

சரியாக கருவாச்சி வந்துட்டா

"இதுதான்டா என் கிப்ட். எடுத்துக்கோ. இனிமே இவ Dr.அமுதா இல்லே. Dr. அமுதா சண்முகம்"

"இத்தன பெரிய கிப்ட் கொடுத்திருக்கே. உனக்கு எதாவது தரனுமே"

"என்ன தரப்போற?"

"முத்தம்"

""போடா கருவாபயலே. இதோ இருக்கா உன் அத்தை மகள் அவளுக்கே கொடு. டாக்டர் அம்மா இது எல்லாம் உன் இடம்தான். எங்க வேனா வீட்ட கட்டிக்க"

அமுதா சத்தம் போட்ட

No comments:

Post a Comment