நம்ம மொபைலோ கம்ப்யூட்டரோ வாங்கிய புதிதில் ரொம்ப வேகமாக செயல் படும்.
கொஞ்ச நாள்ல இருக்கும் குப்பைகளை எல்லாம்
அதனுள் தினிக்கும் போது அதன் வேகம் குறைய ஆரம்பிக்கும்.
நாலு நாள் முன்னாடி என் மொபைலும் இப்படித்தான் சண்டித்தனம் செய்தது. அதுவும் மூன்று நாள் விடுமுறையில் வீட்டுக்கு போன் பண்ண முடியல. பேஸ்புக் மெஸேஞ்சர் ஓப்பன் ஆகல. மொபைல் அடிக்கடி ஹேங்க் ஆச்சி.
இதற்கு ஒரே தீர்வு ரீ பேக்ட்ரி செட்டிங்.இத கொடுத்தா சேமித்து வைத்தது எல்லாமே அழிந்து போகும்.
கடைசியில வேற வழியில்லாம அததான் செஞ்சேன். இப்ப புதிய பொலிவுடன் மொபைல். என்ன இதில் வருத்தப்பட வேண்டிய விசயம் பேக்ட்ரி செட்டிங் கொடுக்கும் போது நான் எழுதி வைத்த நோட்ஸ் லாம் மறந்து போனேன்.
'வடபோச்சே!!!'
moral: நம்ம மனசுல கூட தேவையில்லாத குப்பைகளை சேமித்து வைத்தால் இப்படித்தான் நம்ம மூளையும் (இருக்கா?) சண்டித்தனம் செய்யும்.
நாளும் மனசை புதியதாய் வைக்க தேவையில்லாத குப்பைகளை அகற்றி புத்தம் புதியதாய் வைப்போமே.
No comments:
Post a Comment