ஒற்றை ரூபாய் துணி தைக்கும் ஊசி தொலைந்து போனால் கவலைப்படுவீர்களா?
ஒரு பெரிய இயந்திரத்தில் அதன் சிறிய பாகம் தொலைந்து போனால் கவலைப்படுவீர்களா?
உங்கள் சட்டையின் பொத்தான்களில் ஒன்று அறுந்து எங்காவது விழுந்து விட்டால் கவலைப்படுவீர்களா?
ஒரு ரசனைக்குரிய பெரிய நாவலின் ஒருப்பக்கத்தை காணாமல் போனால் கவலைப் படுவீர்களா?
நீங்கள் எப்படியோ, ஆனால் நான் கவலைப்படுவேன்... எத்தனை ரூபாய் கொடுத்தாலும் ஒரு சின்னஞ்சிறிய ஊசியை அவசரத்திற்கு வாங்க முடியாது.
பெரிய இயந்திரங்களை உடனடியாக வாங்கி கொடுக்கும் நிறுவனம் நான் கேட்கும் மிகச்சிறிய உதிரிபாகத்தை உடனடியாக வாங்கி கொடுக்க முடியாது.
சிறியதோ பெரியதோ நான் தொலைத்த பொருட்களை கிடைக்கும்வரை தேடிக்கொண்டே இருப்பேன்.
அதைவிட சிறந்த மாற்றுப்பொருள் கிடைத்தாலும் என் மனது சமாதானம் அடையாது. இழந்த பொருட்களை கூட மீட்டுவிடலாம்.
இழந்த அன்பை?
No comments:
Post a Comment