அந்த சிறுவன் பூங்காவில் சோகமாக அமர்ந்திருக்கிறான்.
அங்கே ஒரு பெண் வருகிறாள்.
"ஏன் தம்பி சோகமா இருக்க?"
"காலையில தப்பு பண்ணிட்டேன்.அம்மா திட்டிடாங்க"
"அதுக்கு கோபித்துக்கொண்டு வந்துட்ட இல்ல"
"ஆமாம் அம்மா"
"உன்னமாதிரிதான் என் மகனும் எங்கிட்ட கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே போயிட்டான்"
பின் அவர்கள் வெகுநேரம் ஒருவருக்கொருவர் ஆறுதலாக பேசுகிறார்கள்.அவள், தான் கொண்டுவந்த பழங்களையும் ரொட்டிகளையும் உண்ண கொடுக்கிறாள். பின் மாலைவரை விளையாடுகிறார்கள்.
"சரி தம்பி அம்மா தேடுவாங்கல்ல?நீ வீட்டுக்கு போப்பா.இனிமே இப்படி வெளியே வராதே"
"சரி அம்மா.நீங்களும் வீட்டுக்கு போங்க.உங்க பையனும் வந்திருப்பான்."
பிறகு சிறுவன் வீடு வந்து சேர்ந்தான்.
அம்மாவைக் கட்டிக்கொண்டு மன்னிப்பு கேட்டான்
தான் சென்ற இடத்தில் ஒரு அம்மாவை சந்தித்த கதையை சொன்னான்.
"நானும் உன்னைத் தேடிக்கொண்டு சென்ற இடத்தில் உன்னமாதிரிதான் ஒரு பையன் அவங்க அம்மா கிட்ட கோபித்துக்கொண்டு வந்து விட்டான்.இன்று முழுவதும் என் பொழுதை அவனோடு கழித்தேன்." என்றாள் அம்மா.
No comments:
Post a Comment