Saturday, November 22, 2014

கதைகேளு கதைகேளு


அம்மாவை கட்டிப்பிடித்துக்கொண்டு,
"ஒரு கதை சொல்லும்மா"
என்பதில் ஆரம்பித்தது கதை கேட்கும் ஆர்வம்.

ஒரு ஊருல.., என்று ஆரம்பிக்கும் போதே கற்பனை விரியும்.

திரும்ப திரும்ப ஒரே கதைகள்கேட்டாலும் அலுப்பதில்லை.

வானொலி மட்டுமே இருந்த நாட்களில் அதுவும் இல்லாத என் வீட்டில் அம்மா சொல்லும் கதைகளே எனக்கு பொழுது போக்கு.

இந்த கால பிள்ளைகளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனது அவர்களின் துரதிர்ஷ்டம்.

அடுத்து கொஞ்சம் வளர்ந்த பிறகு நூலகமே என் பொழுதுபோக்கு இடமாய் போனது.

3 ரூபாய் சந்தா கட்டி சேர்ந்த புதிதில் அடைந்த சந்தோசத்திற்கு அளவில்லை.

கையில் கிடைத்த புத்தகம் எல்லாம் படித்தேன். இதன் காரணமாக எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை.

புத்தகமே என் உலகமாயிற்று.

வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைத்தேன்.

வேலை, கல்யாணம் பிள்ளைகள் குடும்பம்.

5 வயதில் கடிதம் எழுதிய கைகள் இன்று பேனா பிடிக்க தடுமாறுகிறது.

இலக்கணப்பிழைகள்.

பல வருடங்கள் படிப்பதை விட்டதால் வந்த கோளாறு.

புத்தகம்தான் எனக்கு உலகத்தை புரிய வைத்தது. படிக்காமல் போனது என் தவறு இல்லை. படிக்க வாய்ப்பு இல்லாமல் போனதே.

இரும்பை பிடித்த கைகள் புத்தகம் பிடிக்க நேரம் இல்லை. அந்த வாய்ப்பு இல்லை.
இரும்போடு சேர்ந்து மனமும் இரும்பானது.. அதை இளக வைத்தது இந்த முகநூல் என்றால் மிகையாகாது.

படியுங்கள் நிறைய படியுங்கள்.
நல்ல விசயங்களை தேடி படியுங்கள்.

28 March 2013 at 23:08 ·

No comments:

Post a Comment