Friday, November 14, 2014

திறந்த ஜன்னல்

திறந்த ஜன்னல்
=============

அந்த வீட்டின் பதினைந்து வயதுப்பெண் மிகவும் குறும்புக்காரி.
அவள் வீட்டிற்கு கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ள இளைஞன் வருகிறான்.

"என்னை இந்த வீட்ல தங்கிக்கொள்ள சொல்லி வரசொன்னாங்க"

"வாங்க அவங்க என் அத்தைதான். எங்கிட்டயும் சொன்னாங்க"

அவன் ஆமோதிப்பது போல் புன்னகைத்தான்.

"ரொம்ப குளுருதா? அத்தைக்கு எப்பவும் இந்த ஜன்னல் திறந்தே இருக்கனும்"

"ஏன் அப்படி?"

"நீங்க என் அத்தையை பாத்திருக்கிங்களா?"

"இல்லையே"

"அத்தைக்கு ஒரு துக்க சம்பவம் நிகழ்ந்து விட்டது, ஒருநாள் அத்தையின் புருசனும் அவருடைய தம்பிகள் இரண்டு பேரும் வேட்டையாட போனாங்க.அதுல மாமா மட்டும் வெள்ளை ரெய்ன் கோட் போட்டு இருந்தார். மூனு வருசமாச்சி. போனவங்க போனவங்கதான்.திரும்பி வரவே இல்ல. அவங்க பாடி கூட கிடைக்கல"

"அய்யயோ!"

"இதுல சோகம் என்னன்னா, அவங்க மூனுபேரும் திரும்பி வருவாங்கன்னு இன்னும் அத்தை நம்பிக்கிட்டு இருக்காங்க"

"நிஜமாவா?"

கேட்டவனின் முகம் வெளிறியது.

"ஆமாம், அதான் ஜன்னல மூடிவச்சா அத்தைக்கு பிடிக்காது"

"இப்ப உங்க அத்தை எங்கே?"

"அத்தை வெளிய போயிருக்காங்க, இப்ப வருவாங்க. ஏதாவது சூடா குடிக்கிறிங்களா?"

"இல்ல இருக்கட்டும்.அத்தை வந்து விடட்டும்"

"இதோ அத்தையே வந்துட்டாங்க, அத்தை, இவர் நம்ம வீட்ல தங்க வந்து இருக்கார்"

"ஓ.,என் நண்பர் சொல்லி அனுப்பிச்ச பையன் நீதானா?,.,கொஞ்சம் இரு என் புருசனும், அவங்க தம்பிகளும் வேட்டைக்கு போயிருக்காங்க.இப்ப வந்துடுவாங்க"

"என்னது வந்துடுவாங்களா?" என்றபடி அந்தப்பெண்ணை பார்க்க,

'நாந்தான் சொன்னேன்ல' என்று சைகை காட்டினாள்.

"இதோ அவங்களே வந்துட்டாங்களே" என்றபடி ஜன்னலை நோக்கி கைக்காட்டினாள் அத்தை.

அவன் எட்டிப்பார்க்க, பனி படர்ந்த மலையில். மூன்று பேர் தோளில் துப்பாக்கிகளுடன் பக்கத்தில் ஒருநாயுடன் ஒரு பாட்டை பாடிக்கொண்டு வந்தார்கள்.
அதில் ஒருவர் வெள்ளை கோட் அணிந்திருந்தார்..........

அவ்வளவுதான், இளைஞன் எடுத்தான் ஓட்டம்.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

அவர்கள் மூவரும் வீட்டில் நுழைந்ததும் வெள்ளைக்கோட் அணிந்தவர்கேட்டார்.

"யாரு அந்த ஆளு?இந்த ஓட்டம் ஓடுறான்"

"அதுவா மாமா அந்தாளுக்கு நாய்ன்னா பயமாம்.அதான் ஓடுறார்" என்றாள் அந்த குறும்புக்காரப்பெண்.

‪#‎ஓர்‬ ஆங்கிலக்கதையின் தமிழாக்கம்

No comments:

Post a Comment