நாலாவது படிக்கும் கணேசனுக்கு அந்த பெரிய பள்ளிக்கூடத்து சுமைதாங்கி கல்லில் எப்படியாவது யாருடைய உதவியும் இல்லாமல் ஏற ஆசை.
அவனுடன் படிக்கும் தமிழரசனும் வேனுவும் ஏறும் போது நம்மால் ஏற முடியவில்லையே என்று தன் இயலாமையை நினைத்து வருந்துவான்.
எந்த காலத்தில் எந்த புண்ணியவான் அந்த கல்லை நட்டாரோ யாருக்கு தெரியும்.
அந்த கல்லை லேசாக தட்டினால் நல்ல சப்தம் வரும்.
கணேசன் ஒரு சிறிய கல் எடுத்து தட்டி ரசிப்பான்.
'நான் இன்னும் கொஞ்சம் பெரியவானாகி ஏறுவேன்'
சில காலம் அந்த ஊரை விட்டு பிரிந்தான்.
கொஞ்சம் வளர்ந்த பிறகு மீண்டும் வந்து அந்த சுமைதாங்கி கல்லை பார்த்தான்.
அந்த கல் இரண்டாக உடைக்கப்பட்டு கீழே கிடந்தது.
கீழ்சாதிகாரர்கள் அதில் ஏறி உட்கார்ந்து மேல் சாதி காரர்களை அவமதிப்பதாய் காரணம் சொல்லப்பட்டது.
கணேசனுக்கு தன் சாதியின் மேலேயே கோபம் வந்தது.
இப்போது கணேசன் யாருடைய உதவியும் இல்லாமல் அந்த கல்லில் உட்கார முடியும்.
ஆனால் அதன் பிறகு அதில் அவன் உட்காரவே இல்லை.
இன்றைய காலகட்டத்தில் அந்த கல் போன மாயம் தெரிய வில்லை.
ஒருவேளை யார் வீட்டு முற்றத்திலாவது துனி துவைக்கும் கல்லாக மாறி போயிருக்கலாம்.
இல்லை எந்த வீட்டிலாவது படிகல்லாக இருக்கலாம்.
ஒரு வறலாற்றை அழித்தவனுக்கு விமோசனமே கிடையாது.
Saturday, November 15, 2014
சுமைதாங்கி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment