Wednesday, November 5, 2014

இப்போதெல்லாம்
தபால்பெட்டி
அவசியமில்லாமல்
போய்விட்டது.

ஒரு காலை வேளையில்
பெட்டியை திறந்த போது
ஓற்றை சிறகு என்னைப் பார்த்து
கண் சிமிட்டியது.
எந்த தேவதை எழுதியிருப்பாள்
எனக்கொரு கடிதம்
தன் சிறகுகளில் ஒன்றால்

இப்போதெல்லாம்
தினமும் பெட்டியை
திறப்பதை வழக்கமாக்கி கொண்டேன்.
மீண்டும் ஒரு சிறகை
எதிர்பார்த்து.

No comments:

Post a Comment