கந்தன் எப்பவும் பாட்டு பாடிக்கிட்டே இருப்பான். பாட்டு இல்லையென்றால் அவனுக்கு ஒரு வேலையும் ஓடாது.
என்ன பாட்டு என்ன ராகம்
யார் சொல்லிக்கொடுத்தார்கள்
எதுவும் தெரியாது.
வாய்க்கு வந்ததை பாடுவான்.
ஆத்துத்தண்ணியில்
ஊத்தெறச்சி
அழகழகா பாத்திக்கட்டி
அதுல நாலு செடிய வச்சேன்
இப்ப செடிக்கு நாலு
பூ பூத்திருக்கு
தங்கமே தங்கம்
அது கூட உன்னப்பாத்தா
வெக்குதடி
சிங்கமே சிங்கம்.....
"டேய் வேல செய்யும் போது என்னடா பாட்டு. இனிமே பாட்டு பாடுனா இங்க உனக்கு வேல இல்ல"
-முதலாளி கர்ஜித்தார்
அவனுக்கு வேலையே ஓடல
**************************-*
வீட்ல பாருங்க சும்மா ஒன்னுமே போட மாட்டாங்க. சமையல் வாசம் ஊரையே தூக்கும். ஹோட்டல் ல எல்லாம் போட்டு செய்வான்.
ஆனா வீட்டுக்காரி சமையலுக்கு ஈடாகாது.
காரணம் கைப்பக்குவமும் இல்ல
மண்ணாங்கட்டியும் இல்ல.
மனம் ஒன்றி செய்வது.
இது நம்ம புருசனுக்கு, இது நம்ம பிள்ளைகள் சாப்பிடுவது. நல்லா செய்யனும் என்ற ஈடுபாடு.
அந்த அக்கறை ஹோட்டல்காரன் கிட்ட வருமா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரண்டு பூஞ்செடி எடுத்துக்குங்க.
ஒரு செடிக்கு திணமும் தண்ணிர் ஊத்திக்கிட்டே,
இது நான் வைத்த செடி, நல்லா வளரும், நல்லா பூ பூக்கும்னு சொல்லுங்க.
இன்னொரு செடிக்கு தண்ணிர் ஊத்திக்கிட்டே, இது எங்க வளரபோகுது. இதுவா பூ பூக்கும்னு சொல்லுங்க.
கண்டிப்பாக உங்கள் முதல் செடிதான் பூத்து குலுங்கும்.
இதே அளவு முன் மாதிரியை உங்கள் பிள்ளைகளிடம் காட்டுங்க.
அவர்கள் தன்னம்பிக்கையுடன் வளர்வார்கள்.
No comments:
Post a Comment