Wednesday, November 26, 2014

மஞ்சப்பை

மஞ்சப்பையின் துயரங்களை நெகிழிகள் அறிவதில்லை. 

 புடவை வாங்கியதெற்கென ஒரு மஞ்சப்பை கல்யாண அன்பளிப்பென ஒரு மஞ்சப்பை இப்படி தான் சேர்த்து வைத்த மஞ்சப்பைகள் ஒரு பெரிய பையில் போட்டு வைத்து பரண் மேல் போட்டு வைப்பாள். 

 எங்கு சென்றாலும் என்னோடு பயணிக்கும் ஒரு மஞ்சப்பை. வீடு திரும்பும் போது அவளுக்கு பிடித்த மல்லிகை மொட்டுக்களோ, மாதுளைகளோ ஆப்பிள்களோ இல்லை குழந்தைகளுக்கென நொறுக்குத்தீனிகளோ இடம் பிடிக்கும்.

 இன்னமும் இரண்டாய் மடித்த மஞ்சப்பைகளில்தான் தன் கணக்கு வழக்குகளை வைத்துள்ளாள் என்னவள். 

 மஞ்சப்பையின் சந்தோசங்களையும் நெகிழிகள் தருவதில்லை.

2 comments:

  1. உண்மை.. பழமை என்றுமே இனிமை,, அழகு கூட..

    மஞ்சள் பையில் ஒளிந்திருக்கிறது நேசத்தின் வாசம்...

    நெகிழியில் அது கிடைப்பதுமில்லை.. நமக்கு அது தெரியவும் போறதில்லை...

    அற்புதம் மஹா....

    ReplyDelete
    Replies
    1. எப்போதும் தங்கள் விமர்சனம் எனக்கு டானிக்.

      Delete