Tuesday, November 4, 2014

முதல் காதல்


என் முதல்காதலி

இது பதின்பருவ காதல்
பார்த்தவுடனே பிடித்துபோனது
அவளுக்கும் எனக்கும் அப்படி
ஓர் உன்னத உறவு

உறங்கும் நேரம் உழைக்கும்
நேரம் தவிர அவளே பழியாய்
கிடந்தேன்.

பரந்த உலகத்தை என்
கண் முன் நிறுத்தியவள்

கற்கண்டாய் இனித்தவள்
என் இதயத்தில் குமுதமாய்
மலர்ந்தவள்

இப்படித்தான் அவளுக்கும்
எனக்கும் நெருக்கம் கூடிபோனது

திடிரென வந்தாள்
அவளுக்கொரு சக்களத்தி
என் மனைவியெனும் பேரில்

இவளுக்கு அவளைக் கண்டாலே
பிடிக்கவில்லை
பின்னே தான் இருக்க வேண்டிய மடியில் வேறொருத்தியா?

எவள்தான் பொறுப்பாள்.

கொஞ்ச கொஞ்சமாக
என் காதலி என்னிடமிருந்து
விடை பெறலானாள்

அது நடந்து பலவருடம்
ஆகிவிட்டன.
இப்பொழுதும் எங்காவது
பார்த்தால்,
எனை எடுத்து கொஞ்சேன்
என்பது போல் இருக்கும்.
அவள் பார்வை

இன்னும் விட்டகுறை தொட்டகுறையாக
தொடர்கிறது அவள்மேல்
உள்ள காதல்.

No comments:

Post a Comment