உங்கள் கடந்த கால அசட்டுத்தனங்களையோ தவறுகளையோ அல்லது கஷ்டங்களையோ இப்போது நினைத்துப் பாருங்களேன்.
உங்கள் முகம் புன்னகை பூக்கிறதா?
ஷார்ஜா வந்த புதிது. மொபைல் என்னிடம் இல்லை. துபாய் அத்தனை பரிச்சியம் இல்லை. எப்போதாவது ஒருதடவை வருவேன்.
மைத்துனன் அறை தெரியும்.சில இடங்கள் மட்டும் தெரியும் பார்த்தீபன் சொன்ன துபாய் பஸ்டாண்ட் துபாய் மெயின்ரோடு தெரியும்.
ஷார்ஜாவிலிருந்து பேருந்து பிடித்து வந்து ரொம்ப தெரிந்தவனாட்டாம் பேருந்து நிலையம் அடைவதற்குள் இங்க இறங்கினால் சுருக்கா போயிடலாம் என இறங்கினேன்.
இறங்கியவரை சரிதான்.
ஆனால் இறங்கியவன் எதிர்திசையில் நடக்க ஆரம்பித்தேன்.
ஓடினேன் ஓடினேன் அரபி கடல் ஓரத்திற்கே ஓடினேன்.
அது வளைகுடாதானே.என்னை வளைத்துக் கொண்டது.
ஆஹா வழி தப்பி விட்டோம்.
திரும்பினேன். புறப்பட்ட இடத்திற்கே வந்து நின்றேன்.
என்ன செய்யலாம்.யாரை கேட்கலாம். எனக்கு உதவி செய்தது தெருவில் நிறுத்தப்பட்ட தெருவின் வரைபடங்கள்.
அதன் முன் நின்றேன்.
you are here.
என்றது நான் நிற்கும் இடத்தை காட்டி. அதிலிருந்து மைத்துனன் இருக்கும் தெருவை கண்டு பிடித்தேன்.
இதுவரை இது இரகசியமாகவே இருந்தது.
No comments:
Post a Comment