கொஞ்சம் திரும்பிப் பார்
நீ எத்தனை அழகென்று
நீ மட்டுமே அழகு
உன்னால் எதையும் செய்ய முடியும்
உன்னால் மட்டுமே முடியும்
யாரையும் வெறுத்து விடாதே
யாரேனும் உன்னை காயப்படுத்தியிருக்கலாம்
யாரேனும் உன் செயலை
தூற்றியிருக்கலாம்
யாரையும் வெறுத்து விடாதே
தவறி விழும் குழந்தையின்
சிறகை முறித்து விடாதே
அதன் வலி புரிந்தவன்தானே நீ
உன் மனவலிமை புரிந்தவன் தானே நீ
மனவலிமையற்ற வார்த்தைகளை
உதிர்த்து விடாதே
உழைப்பின் மேன்மை புரிந்தவன்
அல்லவா நீ
உழைப்பவரை இகழ்ந்து விடாதே
அழும் குழந்தை தாய் மடி தேடுவதை போல்
உனக்கு ஒரு தாய் மடி
வேண்டுமல்லவா
பெண்களை இகழந்து விடாதே
ஆணின் சோகங்களை இறக்கி வைக்கும்
பெட்டகமல்லவா அது
நீ மனிதன் நீ மட்டுமே மனிதன்
உன்னால் சுயமாக சிந்திக்க முடிகிறதல்லவா?
நீயே மனிதன்
நீ மட்டுமே மனிதன்
வா கை கோர்ப்போம்
No comments:
Post a Comment