ஒருக்காலத்தில் எங்க ஊரில் காலை நேரத்தில் எந்த வண்டிகளும் உள்ளே நுழைய முடியாது.
தெருவெங்கும் துணி நெய்ய நூல்களை விட்டு சுத்தம் செய்வார்கள். இதனாலே அந்த காலத்துல அகலமான தெருக்கள்.
ஊரில் நுழைந்தால் தறி சப்தம் காதை பிளக்கும்.
அரசாங்க வேலையை கூட வேண்டாம் என சொல்லி விட்டு வந்தவர்களும் உண்டு.
அப்படி பட்ட நெசவாளன் உருத்தெரியாமல் போய்விட்டான்.
ஊருக்கெல்லாம் உடை நெய்பவன் இடையில் ஒருமுழத்துணி
இதுதாங்க அவன்வாழ்க்கை.
தறிநெய்து வயிறு வளர்த்தவன்
இன்று தறிக்கெட்டு நிற்கின்றான்.
ஆனாலும் மக்களின் மானத்தை
காத்தவன் என்ற முறையில் அவன் பெருமை நிலைத்து நிற்கும்.
நானும் சிலநாள் சிலரின் மானத்தை காத்தவன் என்ற முறையில் பெருமை கொள்கிறேன்.
No comments:
Post a Comment