இரத்தத்தின் நிறம் கருப்பு
****************************
See all notifications
'விஷ்னு commented on your post'
அபர்ணா சிரித்தபடி தன் பேஸ்புக் பக்கத்தை திறந்தாள்.
எல்லாம் கமெண்ட்டும் ஒரே மாதிரியாய்.
'வாவ்'
'நைஸ்'
'செம'
எல்லா கமெண்டையும் படித்துவிட்டு,
மெஸேஜ் பக்கத்தை திறந்தாள்.
அங்கேயும் வழக்கம் போல்
'ஹாய்'
'i love you sellam'
'varalama?'
'நீங்க எப்ப ஃபிரி?'
விஷ்னு மட்டும் ஆய் செல்லம் உன் மேனிக்கு சோப்பாக நான் மாற வேண்டும் என்று கவிதை பாடி வைத்திருந்தான்.
இங்கே விஷ்னுவைப் பற்றி சொல்லியாக வேண்டும்.
பேஸ்புக்கில் பெண்களுடன் கடலை போடவேண்டியது.மடங்குகிற பெண்களை முடித்து விட்டு அடுத்தப் பெண்ணை தொடரவேண்டியது.வயது ஒரு பொருட்டில்லை அவனுக்கு தினம் ஒருப் பெண் வேண்டும். அவ்வளவுதான். கேட்டால் காமத்திற்கு வயதில்லை என்பான். கொஞ்சம் அழகும் நிறைய வசதியும் வைத்து பெண்களை வளைத்தான்.
இதோ நம் நாயகி அபர்ணா அவனுக்கு,
'இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய் அன்பே அன்பே' என்று பதில் அனுப்பினாள்
அவளை புகழ்ந்து வந்த அத்தனை கமெண்ட்களுக்கும் பொறுப்பாய் யாருடைய மனம் கோணாமல் பதில் எழுதினாள்.
'உங்க நிஜப்பெயரே அபர்ணாதானா? உங்கள நேரா பாக்கனுமே என்று வழிந்தான் சோப்பாக மாற துடித்த விஷ்னு.
'ம் பாக்கலாமே' என்று பதில் அனுப்பினாள் அபர்ணா.
'ஐயோ தெய்வமே எப்பங்க?'
'சண்டே'
'எங்க? எத்தன மணிக்கு?'
'நுங்கம் பாக்கம் இரயில்வே ஸ்டேசன். காலை 5மணிக்கு'
'ஐயோ நீங்க சுடுக்காட்டுக்கு வரச்சொன்னாலும் வருவேங்க, ஆனா ஏன் காலையில அதுவும் இரயில்வே ஸ்டேசன்ல?'
'நான் சண்டே ஊருக்கு கிளம்புறேன். அப்படியே உங்கள பாத்துட்டு கிளம்பலாமுன்னு'
'அப்ப நீங்க இருக்குறது நுங்கம் பாக்கமா?'
'ம்.சந்தோசம்தானே?
'இல்ல அபர்ணா'
'என்னாச்சி? நாந்தான் வரேன்னு சொன்னேனே'
'அந்த சண்டே வர இன்னும் நாலு நாள் இருக்கு'
'அதுக்கு?'
'அட்வான்ஸா முத்தம்'
'போடா'
'சரி சரி கோச்சுக்காத அபர்ணா.என் போட்டோவ நீ பாத்திருக்க. உன் போட்டோவ நான் பாக்கலயே. எப்படி அடையாளம் கண்டு பிடிக்கிறது?'
'மஞ்சள் சுடில வரேன்,நல்லா கேளு. கூட யாரையும் அழைச்சிட்டு வராத. தனியா வா'
'ம் சரி அபர்ணா.
நான்கு நாட்கள் கழித்து நுங்கம் பாக்கம் இரயில் நிலையத்தில் அந்த ஞாயிற்றுக் கிழமை காலை மணி நான்கு ஐம்பதுக்கே தனியாக கிடந்த இருக்கை ஓன்றில் அவளுக்காக காத்திருந்தான்.
இன்னும் விடியாத காலையில் ஐன நடமாட்டம் அதிகமில்லை. மசமசவன்று கொஞ்சம் இருட்டாக வேறு இருந்தது.
மிகச்சரியாக ஐந்துமணிக்கு நீல ஜீன்ஸ் டீ சர்ட் அணிந்து இரயில் நிலையத்திற்குள் நுழைந்தாள் அபர்ணா.
நேராக விஷ்னு இருக்குமிடம் அறிந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்து அவன் பின்னால் கைபோட்டபடி அவன் வாயை கெட்டியாக பொத்தியவள் அவன் என்ன ஏதென்று சுதாரிப்பதற்குள் மறுகையில் வைத்திருந்த கூர்மையான கத்தியை அவன் வயிற்றில் இறக்கினாள்.
ஒருமுறை திமிறியவனை கத்தவிடாமல் வாயை கெட்டியாக மூடி கத்தியை இன்னொருமுறை இறக்கினாள்.
கொஞ்சம் கொஞ்சமாக அவன் சுவாசம் அடங்கியதும் கத்தியிலிருந்த இரத்தத்தை அவன் அணிந்திருந்த கருப்பு சட்டையில் துடைத்து விட்டு கத்தியை பைக்குள் வைத்தவள் மறக்காமல் விஷ்னுவின் மொபைலை எடுத்துக்கொண்டு சாவகாசமாக அங்கிருந்து புறப்பட்டாள்.
No comments:
Post a Comment