திருமணங்கள் விஞ்ஞானக்கூடத்தில் நிச்சயக்கப் படுகின்றன.
****************************""
வருடம் 2116
அவன் அந்த விஸ்தாரமான கட்டிடத்தின் வரவேற்பறையில் காத்திருந்தான்.
திரு.ax7543891 என்று வரவேற்பாளினி ஒலிபெருக்கியில் அழைத்ததும் அவன், அவள் முன் நின்றான்.
"உங்கள் பெயர்?"
"ax7543891"
"இனம்?"
"மனித இனம்".
"திருமணத்திற்காக பெண் வேண்டி விண்ணப்பத்திருந்தீர்கள் அல்லவா?"
"ஆமாம்"
"நீங்கள் விண்ணப்பித்திருந்தது மனித இனத்தில் ஒரு பெண் வேண்டி அல்லவா?"
"ஆமாம்"
"மன்னிக்கவும் திரு. ax. மனித இனத்தி்ல் பெண்கள் அருகி விட்டது உங்களுக்கு தெரியாதா? நீங்கள் அதற்கு இன்னும் பதினைந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். இதோ இந்த குழந்தைதான்.இவளுக்கு இப்போது வயது 12.இவள் வளர்ந்து என்று நீங்கள் திருமணம் செய்வது? அத்தோடு இவள் உங்களை நிராகரித்து விட்டால் எங்களால் ஒன்றும் செய்யமுடியாது.
உங்களுக்கேற்ற இயந்திரப் பெண் தயாராக இருக்கிறாள்.
என்னைப்போலவே"
அவன் தவிர்க்க முடியாமல் புன்னகை ஒன்றை உதிர்த்தான்.
"என்ன சம்மதமா?"
"சம்மதம்"
"மருத்துவச்சான்றிதழ் இருக்கிறதா?"
"இருக்கிறது".
"மன்னிக்கவும், சற்று காத்திருங்கள்"
என்று சொல்லிவிட்டு ஓரு சார்ஜர் வயரை எடுத்து தன் இடுப்பின் வலது பக்கத்தில் சொருகினாள்.
"பேட்டரி மாற்றவேண்டும் என நினைக்கிறேன்.இப்படி அடிக்கடி சார்ஜர் இறங்கி விடுகிறது"
அவன் ஒரு புன்முறுவல் ஒன்றை உதிர்த்தான்.
அடுத்து அவளின் ஆட்காட்டி விரலை இடவலமாக அசைத்தாள்.அதிலிருந்து செவ்வக வடிவில் 16 அங்குல அளவிற்கு திரை ஒன்று அவள் எதிரில் தோன்றியது...
அடுத்து அவள் முன் தோன்றிய எழுத்து வடிவ பிம்பத்தில் அவன் பெயரை தட்டினாள்..
திரையில் அவனைப் பற்றிய விபரங்கள் வந்து விழுந்தன..
பெயர்: ax7543891..
வயது: 27
தொழில்: விவசாயம்
தேவை:மணப்பெண்
எல்லாவற்றையும் என்டர் கொடுத்து ஒருபட்டனை தட்டினாள்.
"உங்கள் அதிர்ஷ்டம் திரு ax7543891அவர்களே.உங்களுக்கேற்ற மணப்பெண் தயாராகி விட்டாள். நீங்கள் இப்போதே இங்கேயே மணம் முடித்து அவளை அழைத்துச் செல்லலாம்"
"மிக்க நன்றி"
"சரி வாருங்கள் விஞ்ஞானக் கூடத்திற்கு செல்வோம்"
அவர்கள் இருவரும் அந்த விஞ்ஞானக் கூடத்திற்கு முன் நின்று தங்கள் அடையாள அட்டையை காட்டியதும் கதவுகள் பக்கவாட்டில் திறந்து அவர்களுக்கு வழிகாட்டின.
அங்கு ஓர் அறையில் கிடத்தப்பட்டிருந்த ஒருப் பெண்ணின் உடல் மிக அழகு படுத்தப்பட்டு சார்ஜர் ஏறிக்கொண்டிருந்தது. அவள் அழகாக இருந்தாள்.
இப்போது வரவேற்பறை பெண் மணமகளின் பின்னால் போய் அவள் முதுகின் மீது கை வைத்து ஓரிடத்தில் அழுத்தினாள். சார்ஜர் முழுவதும் ஏறியதற்கான குறியீடு காட்டியது.
"நல்லது. திரு. ax7543891 இவள் பெயர் ov5032678. இவள் இன்றிலிருந்து உங்கள் மனைவி. இவளை நீங்கள் அழைத்துச் செல்லலாம். இவள் எல்லா விதத்திலும் உங்களுக்கு உதவியாக இருப்பாள். இனிமையாக பாடுவாள். நடனம் ஆடுவாள். உலகத்தின் அத்தனை மொழிகளையும் இவள் உள் வாங்கியிருக்கிறாள். இவளுக்கு தெரியாத விசயங்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு நிறைய கற்றுக்் கொடுத்திருக்கிறோம். மனைவிக்குரிய அத்தனை கடமைகளையும் செய்வாள் குழந்தை பெற்றுக்கொள்வதை தவிர.
எதாவது பிரச்னை என்றால் இவளை இங்கே அழைத்து வாருங்கள். நமது கணனி பொறியாளர் சரிசெய்து கொடுப்பார் ஒருவருடம் வரை இலவசமாக சரிசெய்து தருவோம். ஆனால் இவளை துன்புறுத்தினாலோ, அடித்தாலோ எங்களுக்கு உடனடியாக செய்தி வந்துவிடும்.வாழ்க வளமுடன்"
"மிக்க நன்றி...."
"என் பெயர் kj0000000. என்னை நீங்கள் kj என்றே அழைக்கலாம்"
அடுத்து kj மணப்பெண்ணைப் பார்த்து செல்வி.ov இவரை பிடித்திருக்கிறதா.இவரை மணந்து கொள்ள சம்மதமா?"
"எனக்கு சம்மதம்"
"சரி இருவரும் உங்கள் விரல் ரேகைகளை பதிந்து விட்டு நீங்கள் செல்லலாம். வாழ்த்துகள் இருவருக்கும்"
No comments:
Post a Comment