Friday, November 21, 2014

சிறுவயதில் வாய்க்காலில் குளிப்பதென்றாலே ஆணந்தம். அதுவும் யாராவது வயதொத்த இளம்பெண்கள் பார்க்கிறார்களா என நோட்டம் விட்டுக்கொண்டே மதில்மேல் ஏறி டைவ் அடிப்பது சாகசம்.

ஒருநாள் வாய்க்கால் பக்கத்துல ஒருவர் இரண்டு கைகளின் பெருவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் ஒரு பச்சை வேப்பங்குச்சியை வைத்துக்கொண்டு அடிமேல் அடிஎடுத்து நடந்தார். அவர் எதற்கு அதை செய்கிறார் என்று தெரிந்ததால் சுவராஸ்யமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.

இப்போது அவர் ஒரிடத்தில் கால் பெருவிரலை ஊன்றியதும் அவர்கையில் இருந்த வேப்பங்குச்சி சுத்தியது. சிறிது காலை அசைத்தார். குச்சி சுத்துவது நின்றுவிட்டது. திரும்ப பழைய இடத்தில் காலை வைத்தார். திரும்ப குச்சி சுத்தியது. ஆக அந்த இடத்தை தோண்டினால் தண்ணீர் கிடைக்கும் என்பது உறுதியானது. இதே முறையில் தேங்காய் சுற்றுவது கூட கண்டுள்ளேன்.

இந்த நாட்களில் குச்சி சுத்துமா என்பது தெரியவில்லை. தண்ணீர் இருந்தால்தானே?

No comments:

Post a Comment