நீ தேவதையா ராட்சசியா
ஒரு கையில் தீப்பந்து
மறுகையில் பூப்பந்து
பூப்பந்தை பறித்தால்
தீப் பந்தை நீட்டுகிறாய்
தீப்பந்தை பறித்தால்
பூப்பந்தை நீட்டுகிறாய்
என் வழி போனால்
இடை வந்து மறிக்கிறாய்
இடை பற்ற வந்தால்
தடை போட்டு பேசுகிறாய்
நான் என்ன மரப்பாச்சியோ
எனை வைத்து விளையாட?
No comments:
Post a Comment