Monday, November 24, 2014

வாழ்வின் சூட்சமம்

பட்டாம்பூச்சியை துரத்தி பிடிக்கும் சிறார்கள்
முதன்முதல் ஏற்படும் எதிர்பாலின தொடுகை
புதிதாய் பிறத்த குழந்தையின் ஸ்பரிசம்
போர்க்களத்தில் எதிரிகளை வீழ்த்தும் போர்வீரன்
அழகிய ஓவியம் படைக்கும் ஓவியன்
மிகச்சிறந்த கவிதை எழுதும் கவிஞன்

இத்தனையுலும் அடங்கியுள்ளன வாழ்விற்கான சூட்சுமங்கள்.

Sunday, November 23, 2014

ஒரு சண்டை from sunday chatting

அறிமுகம்: ரமாவும் உமாவும் face book தோழிகள். இருவரும் பொய் பெயரில் வலம் வருபவர்கள்.

வாங்க போகலாம், என்ன பண்றாங்கன்னு பாப்போம்.

" சண்டே எப்படி போகுது ரமா?

" எதோ போகுது உமா "

"ஏன் சலிச்சுக்குற "

"என்னத்த சொல்ல?"

"உன் பிரண்டு நான் இல்லையா? எங்கிட்ட சொல்ல கூடாதா?"

"ஒன்னும் இல்லடி. விடு "

" புருசன் கொடுமையோ?"

"ஐயோ அவர் தங்கம்"

"அப்பறம். மாமியா கொடுமையோ ?"

"ஆமாம்டி"

" ரொம்ப படுத்துறாளோ?"

" அத என் கேக்கற? "

" உன் புருஷன் கேக்கமாட்டரா இதெல்லாம்?"

" அவர் கேட்டார்னா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் சனியன்"

" லீவ்ல எங்கயும் போகலையா?"

" எங்கடி உமா இந்த மாமியார்கிழம் இருக்கிற வரைக்கும் நான் எங்கயும் போக முடியாது .சனியன் வாழவும் விடாது சாகவும் விடாது"

"....................................."

ரமா : 'எங்க காணும் திடிர்னு ஓடிட்டா'

எதோ உணர்ந்த ரமா பின்னல் திரும்பி பார்க்க மாமியார் முறைத்தபடி நின்று கொண்டு இருந்தாள்.

" ஏண்டி நான் சனியனா? நான் சீக்கிரம் போய் சேரலையா ? ஏன் கொன்னுபுடேன் ஒரேஅடியா போய்டுறேன் . இன்னைக்கு வரட்டும் அவன்"

ரமா:கடவுளே

விளம்பரங்களின் அட்டூழியங்கள்

நம் மக்களின் தாழ்வு மனப்பான்மையை காசாக்க தெரிந்தவர்கள் விளம்பரதாரர்கள்தான்.

கருப்பா இருந்தா கல்யாணம் நடக்காது அப்படின்னு மக்களை மூளைச்சலவை செய்து காசு பார்ப்பதில் கெட்டிக்காரர்கள்.

மக்களிடம் ஒரு தாழ்வுமனபான்மையை உருவாக்குகிறார்கள்.

ஒருப் பெண் பலவகைகளில் தன் அழகை வெளிப்படுத்துகிறாளாம். ஒரு லைக் கூட போடலயாம்.

அடேய் நாங்களாம் பேக் ஐடிக்கே பேனர் கட்றவங்கடா.

நம்ம ஒரிஜினல் கருப்புதானே. அப்பறம் ஏன் அத மறைக்கனும்.

இந்த கவர்ச்சிகரமான விளம்பரங்களின் முன்னோடி முப்பது வருடங்களுக்கு முன்னால் வந்த பாம்பே-டையிங் விளம்பரம்தான்.

ஒரு கவர்ச்சியான உடை அணிந்த பெண்ணை பார்த்துக்கொண்டே வரும் ஓர் இளைஞன் இடித்துக்கொள்வான்.

அதற்கு கட்டு கட்டி வந்தால் அடுத்து ஒரு பெண். இப்போது கை முறிந்து போகும்.

அதற்கு கட்டு கட்டி வந்தால், அடுத்து ஒரு பெண் இப்போது அவனுக்கு கால் முறியும்.
அடுத்து அவன் சக்கரநாற்காலியில் வருவான். இப்போது இன்னொரு பெண் வருவாள்.இப்போது அவன் போய் சேரும் இடம் அதலபாதாளம்
மேலிருந்து வண்டியோடு விழுந்து இறந்து விடுவான்.

அந்த அளவிற்கு பாம்பே டையிங் துணிகள் கண்ணை பறிக்கும் என்று காட்ட எடுக்கப் பட்ட விளம்பரம். அது.

Saturday, November 22, 2014

பூமாரங்

பெரும்பாலோர்க்கு பிடித்தது அடுத்தவர் தவறுகளை பார்த்து ரசிப்பது. இதை வைத்து காசாக்க தெரிந்தவர்கள் Zee போன்ற தொலைகாட்சியினர்.

சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் இவர்களை போன்றவர்களால்தான் சக்கைப் போடு போடுகிறது.

'உன்னை விட்டேனா பார். உன்னை சந்தி சிரிக்க வைக்கல, எங்கப்பனுக்கு நான் பொறக்கல' ன்னு மார்தட்டி கடைசியில் இரண்டு பேரும் மண்ணாபோய் மானம் நெட்ல ஏறும்.

எங்க மாமி ஒருத்தங்க இருக்காங்க. ஒரு முப்பத்திரண்டு, முப்பத்துமூனு வருசத்துக்கு முன்னாடி

காஸ் அடுப்பு அதிகம் புழக்கத்தில் இல்லாத காலம்
அடுப்புக்கு விறகுகளையே நம்பி இருந்த காலம்.

பக்கத்து வீட்டில் ஒரு பெண் வாழ்க்கைப் பெற்று வந்திருந்தாள். அவளைப் பற்றி புகார் படிக்க மாமியிடம் வந்தாள் அந்த பெண்ணின் மாமியார்.

எங்க மாமி ஏக் மார் தோ துக்கடா பார்ட்டி.
எதுவா இருந்தாலும் எடுத்து போட்டேன் கழுத்த முறிச்சேன்தான்.

"வாத்தியாரூட்டம்மா, இந்த கூத்த கேட்டிங்களா? புதுசா வந்த என் மருமக அடுப்புக்கு சீமெண்ண ஊத்தி பத்த வைக்குறா"

"இந்தா கிழவி.இந்த பஞ்சாயத்தெல்லாம் இங்க கொண்டு வராதே.நானே சீமெண்ண ஊத்திதான் அடுப்பு பத்த வைக்கிறேன்."

விசயம் இத்தோடு முடிந்து விட்டது.அதை காது கொடுத்து கேட்டால் ஒரு மருமகளின் வாழ்க்கை அந்தரத்தில்.

எங்க வீட்டுக்காரி எப்படித்தெரியுமா?

"அடியே செல்வி கேட்டியா கதைய. நம்ம இவ இருக்கால்ல அவ எவனையோ வச்சிருக்காலாமுல்ல"

"இந்த பிரச்னையெல்லாம் பேசிக்கிட்டு என் வீட்டுக்கு வராதே.அவ சௌகரியம் அவ வச்சிருக்கா.. நம்ம பொழப்பயே நமக்கு பாக்க நேரமில்ல. வேனுமுன்னா நீயும் வச்சிக்க.அதென்ன அடுத்த வீட்டு கதைய பேசறது" என்பாள்.

இரட்டைவரி நோட்டு-1

நான் திருமணம் செய்த புதிது. காலையில போனா இரவுதான் வருவேன். இதில் பொண்டாடிய கொஞ்ச நேரமேது?

எதிர்வீட்டில் ஒரு நடுத்தர தம்பதிகள். அவர்களும் என்னைப்போல்தான். தினக்கூலி.
இரண்டு பேரும் வேலைக்கு போவாங்க. பிள்ளைங்க நாலைந்துக்கு மேல் நண்டும் சிண்டுமாய்.

லீவு விட்டால் புத்தகத்தை தூக்கி வைத்துக் கொள்வேன். எதிர் வீட்டில் பார்த்தால் புருசன் பொண்டாடிக்கு பேன் பார்ப்பதும் தலைவாரி விடுவதும்,பொண்டாடி புருசனுக்கு பேன் பார்ப்பதும் நடக்கும்.

அப்படி ஒரு கொஞ்சல் குளாவல்.

திடிர்னு பாத்தா செம்ம அடி விழும். அந்தம்மா கெட்ட கெட்ட வார்த்தையால திட்டும்.

அப்பறம் கொஞ்ச நேரத்துல கொஞ்சிக்கிட்டு இருப்பாங்க..

ஒருநாள் அந்தம்மா என் வீட்டுக்காரிகிட்ட கேட்டாங்களாம்,

'என்ன உன் புருசன் உங்கிட்ட ஆசையா பேசவே மாட்டானா?சந்தோசமா வச்சிக்கிறானா' ன்னு.

மிக வசதியான குடும்பங்களில் வாழ்வதாக காட்டிக்கொ'ல்'வார்கள்.
என் சிறுவயதில் கூட நிறைய குடும்பங்கள் ஊரார் போற்ற வாழ்ந்தவர்கள் உண்டு.ஆனால் உண்மையில் தனித்தனி படுக்கை.

‪#‎ரவி‬ சார் போஸ்ட் பார்த்ததும் எனக்கு அவர்கள் நினைவுதான் வந்தது

இரட்டைவரி நோட்டு-4

இறைவன் யார் யாருக்கு எங்கு முடிச்சி போட்டு வைத்திருக்கிறான் என்பது பரம இரகசியம்.

அது மிகப்பெரிய குடும்பம். பெண்கள் அனைவரும் அந்த காலத்திலியே நன்றாக படித்து அரசாங்க வேலையில் உள்ளவர்களை திருமணம் செய்து கொண்டனர். அதைபோல் ஆண்மக்கள் அனைவரும் நன்கு படித்து வேலையில் உள்ள பெண்ணாக திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் கடைசி பிள்ளை மட்டும் படிப்பு ஏறாமல் கொஞ்சம் அம்மாஞ்சியாய் போய் விட்டான்.

எங்காவது ஒரு குறை இருந்தால் அதை சமமாக்க ஏதோ ஒரு வகையில் ஒரு நிறையையும் வைத்து விடுவானே இறைவன்.

கடைசி வாரிசு படிக்க வில்லையாததால் அண்ணன்மார்கள் தம்பிக்காக பரம்பரை நிலங்களையும் மிகப்பெரிய அந்தக்கால ஓட்டு வீட்டையும் விட்டு கொடுத்தனர்.

அந்தக்கால நாட்டு ஓடு வேய்ந்த வீடு அதே பொலிவுடன் இன்னும் உள்ளது.

படிக்காத மக்கு பிள்ளைக்கு வாய்த்த பெண் நன்கு படித்து ஆளுமை தன்மை உள்ளப்பெண்.

இவங்கள தங்கை என்பதா அல்லது என் மனைவிக்கு சித்தப்பாவின் மனைவி என்பதால் மாமியார் என்பதா என புரியாததால் முறை சொல்லி அழைக்க மாட்டேன்.

மக்கு கணவனை வைத்துக்கொண்டு இருக்கும் நிலங்களை வைத்து பிழைப்பு நடத்தி இப்போது இவர்கள் இருமகன்கள் இன்ஜினியர்கள்.

இந்த பெண்ணைத்தவிர வேறு யார் வந்திருந்தாலும் அவனை மனிதனாக்கி இருக்க முடியாது.
(இது எனக்கும் பொருந்தும்)
~~~~~~~~~~~~~~~

சிலநாட்கள் முன் என் மனைவி சொன்னது,

"எனக்கு முன்னாடி நீ செத்து போய்டுயா. நான் முன்னாடி செத்து போனா நீ என்ன கஷ்டபடுவியோ?"

எத்தனை பெரிய வார்த்தை

ஆண்கள் கடைசி காலத்தில்தான் மனைவியின் அருமையை உணர்ந்து கொள்கின்றனர்.

இரட்டைவரி நோட்டு-5

எனது நண்பர் ஒருவரின் அண்ணன் மிகவும் வித்யாசமானவர்

அண்ணார் மிகுந்த கடவுள் பக்தி உள்ளவர். கொஞ்சம் அல்ல நிறைய பழமைவாதி.
ஆனால் மிக நேர்மையானவர்.

நாங்கள் குடும்பத்தோடு அவர் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் எங்களை உபசரிப்பார்கள்.

ஆனாலும் எங்களுக்கும் அவருக்கும் இடையில் ஒரு கண்ணுக்குத்தெரியாத இழை ஓடவே செய்தது. அது நாங்கள் ஒரே இனம் என்றாலும் அவர்கள் சைவம், நாங்கள் அசைவம்.

ஆனால் அந்த வீட்டு அண்ணியார் இதையெல்லாம் கணக்கில் கொள்ள மாட்டார்.

சகலவித அபிலாசைகள் கொண்ட சாதாரண பெண்..

ஆனால் அண்ணா பார்க்கத்தான் சாது.ஆனால் உள்ளுக்குள் படுபயங்கர வில்லன்.

மனைவி என்பவள் அடுப்பங்கரைக்கும் படுக்கையறைக்கும் மட்டும்தான் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்.

சைக்கிள் சப்தம் கேட்டால் போதும், விளையாடிக்கொண்டிருக்கும் பிள்ளைகளும் எங்களோடு சர்வசாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும் அண்ணியாரும் கப்சிப் ஆகிவிடுவர்.

அவர்கள் வீட்டில் ஓர் உளுத்துப்போன கட்டில் இருந்தது.

சொன்ன வரதட்சனையை சரியாக செய்யவில்லையென்ற ஒரே காரணத்திற்காக அந்த கட்டிலை உபயோக படுத்தாமல் விட்டவர்.

மாமனாரின் கட்டிலை மட்டும்தான், மாமனாரின் பெண்ணை அல்ல.

இதை சாடிசம் என்று சொல்லலாம்
அந்த கட்டிலைப் பார்க்கும் போதெல்லாம் அண்ணியாரின் மனம் மிகுந்த வேதனைக்குள்ளானதை நானறிவேன்.

மனைவி அம்மா வீட்டிற்கு போக கூடாது. பெண்கள் புத்தகம் படிக்கக் கூடாது என்று நினைப்பவர்.

அண்ணியார் வார இதழ்களையும் கதை புத்தகங்களையும் ஒளித்து வைத்து படிப்பார்.

நாங்கள் போகும்போதெல்லாம் அண்ணியாரையும் குழந்தைகளையும் எங்க வீட்டுக்கு அழைத்து வர கேட்போம்.அவர்களுக்கும் கொள்ளை ஆசை.ஆனால் அண்ணா மறுத்து விடுவார்.காரணம் நாங்கள் அசைவம் என்ற ஒரே காரணத்திற்காக.

ஆனால் இப்படி பட்ட ஒழுக்கசீலருக்கு பிள்ளை தறுதலையாக போய்விட்டான். இப்போது அவர்களோடு தொடர்பு கொண்டு பலவருடங்கள் ஆகின்றன.