Thursday, January 22, 2015

வாழ்க்கை
வண்ணமிகு ஓவியமல்ல, புரியாத புதிராய் திகழும் மாடர்ன் ஆர்ட்ஸ்.

வாழ்க்கை
தெளிந்த நீரோடையல்ல, கரைபுரண்டோடும் காட்டாறு.

வாழ்க்கை தேசியநெடுஞ்சாலையல்ல, சுகமாய் பயணித்துச் செல்ல,
கற்களும் முட்களும் நிறைந்த காட்டுப்பாதை.

அத்தகைய காட்டுப்பாதையில் நீங்கள் நடந்ததுண்டா?

நான் நிறைய நடந்திருக்கிறேன் நடந்தும் வருகிறேன்

எனக்கு மட்டும் கால்கள் வலிப்பதேயில்லை.

Thursday, January 8, 2015

காலையில் எழுந்ததும் ஏதோ உறுத்த மன்னிக்கவும் உறுத்தாமல் இருக்கவே கைகளைப் பார்த்தேன். விரலில் இருந்த மோதிரத்தை காணவில்லை.

நேத்து நைட் படுக்கும்போது இருந்துச்சா? சரியாக ஞாபகம் இல்லை. பாயை மெதுவாக சுருட்டினேன். காணவில்லை. எங்க போயிருக்கும்.

நைட் பாத்ரூம் போனப்ப கழண்டு விழுந்துருக்குமோ?

ஆசை ஆசையாக எனக்கு மோதிரம் வாங்கி போட்டவள் எதுவும் தெரியாமல் சமையலறையில். விசயம் தெரிஞ்சுது பேயாட்டம் ஆடுவாள்.

மெதுவாக எழுந்து பாத்ரூமில் தேடினேன். கட்டிலில் தேடுனேன். இல்லை. மெதுவாக அவளுக்கு சந்தேகம் வராத மாதிரி (அந்த பக்கம் திரும்பி யிருந்தாலும் கண்கள் பின்னாலும் உண்டு. :p)

"என்ன தேடுறிங்க?"

' கண்டுபுடிச்சிட்டா'

"ஒன்னுமில்ல. டீ கொடேன்"

"இல்ல வீட்ட அளக்குறிங்களேன்னு கேட்டேன்"

"ஆமா டேப்பு வச்சி அளக்குறேன்"

டீயை குடித்தபடி டீவி மேல கீழ எல்லா இடத்திலும் தேடினேன்.

இரண்டு பேர் முதல் எழுத்தையும் MS என பொறித்த ஒருபவுன் மோதிரம். . காணாம போச்சின்னுசொன்னா கொன்னேபுடுவா

குளித்தேன்.இட்லி கொடுத்தாள் பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பினார்கள். இட்லியை சாப்பிட்டேன்.

'அப்பாடா இதுவரை கவனிக்கல.ஒருவேளை பீரோவுல வச்சேனா?'

ஓட்டமாய் ஓடி பார்த்தேன்.ம்ஹூம்.

மொட்டைமாடிக்கு துணி காயப்போட போனேனே.
அங்கேயும் இல்லை.

இன்னைக்கு கொலை விழப்போகுது.

இருக்குற டென்சன்ல கொஞ்சம் வெளியே போய்ட்டு வந்தால் நல்லாருக்கும்

டீக்கடையில் பேப்பர் படித்து விட்டு திரும்ப வந்தேன்.
எல்லா வேலைகளையும் முடித்த தர்மபத்தினி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

"சாப்டுறிங்களா?"

"எத்தன தடவ சாப்புடறது?"

"ஏன் மூஞ்சி இஞ்சி தின்னமாதிரி இருக்கு?"

"நல்லாத்தானே இருக்கு?"

"மோதிரம் எங்க?"

"-----------"

"இப்புடித்தான் குடித்தனம் பண்றதா?இராத்ரி மோதிரத்த எங்க கழட்டி வச்சிங்க?"

'அப்பாடா மோதிரம் கிடைத்து விட்டது.'

"எங்க இருந்துச்சி?"

"ம்.வீடு பெருக்கி குப்பைய கொட்டப்போறேன்.அதுல கிடக்குது.இப்படி குடும்பம் பண்ணா எப்படி உருப்படும். இனிமே மோதிரம் கொடுக்க மாட்டேன்"

மறக்காமல் பீரோவில் வைத்து பூட்டினாள்.

அது என்னவோ தெரியல.
தூக்கத்துல நடக்குற வியாதி மாதிரி தூக்கத்துல மோதிரம் கழட்டும் வியாதி எனக்கு.

சிலநாள் கழித்து,

"கல்யாணத்துக்கு போகனுமே கிளம்பலயா?"

"நான் வரல.நீ போய்ட்டு வா"

"நான் மட்டும் போனா நல்லாருக்காது.கிளம்புங்க"

கிளம்பினேன்.
வீட்டை பூட்டியவள் ,

"விரல காட்டு "என.சொல்லி மோதிரத்தை மாட்டி விட்டாள்.

கல்யாணம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன்.

"மோதிரத்தை கழட்டு" என்றாள். கழட்டி கொடுத்ததும் மறக்காமல் பீரோவில் வைத்து பூட்டினாள்.

Sunday, January 4, 2015

"அடக்கடவுளே... காலம் கெட்டு கிடக்கு"

"என்னாச்சி?"

"இரண்டு நாளைக்கு முன்னாடி வீடு எரியிற மாதிரி கனவு கண்டேன்னு சொன்னேன்ல"

"ஆமாம்.அதுக்கென்ன இப்போ?"

"அலமேலு குட்டி வயசுக்கு வந்துட்டா"

"நாலாவது தானே படிக்கிறா"

"அதான் அக்கம் பக்கம் யாருக்கும் சொல்லாம தண்ணிய ஊத்தியாச்சி"

இப்படித்தான் தான் கண்ட கனவுகளுக்கு ஏதாவது ஒரு மேற்கோளை காட்டுவாள் என் மனைவி.

ஏறக்குறைய அவை சரியாகவே இருக்கும்

"இந்த மூலையில பல்லி கத்துனா ஏதாவது நல்ல சேதி வரும்"

"எங்க இங்கயா?"

"கைய காட்டாதிங்க"

எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு நேராக செல்ல பஸ் வசதி அதிகம் இல்லாத காலம் அது. பெரும்பாலும் ஆற்றைக்கடந்து பஸ் பிடித்து அங்கிருந்து பின் மறுபடியும் அதே ஆற்றைக்கடந்து கோவிலுக்கு போகவேண்டும். தலையச் சுற்றி மூக்கைத் தொடுவது போல.

அந்த ஆற்றங்கரையில் ஓர் அய்யனார் கோவில்.

தான் கண்ட ஒரு கனவைப் பற்றி சொன்னாள் என் மனைவி.

"கோவிலுக்கு போயிட்டு ஆத்தை தாண்டி கரையேறுனேனா? கரையிலியே அய்யானார் என்ன மறிச்சிக்கிட்டாரு.

அப்ப அய்யானாரு என்கிட்ட சொன்னாரு
இந்தாம்மா உன் வழி இங்கில்லையே அப்படியே திரும்பி போயிடு.இது என் இடம் இந்தப்பக்கம் எல்லாம் வராதே.இந்த வழியா வந்து போற என்னைக்காவது என்ன கும்புட்டு இருக்கியா?அப்படியே திரும்பி போ"

அப்ப திரும்பி பாத்தா நம்ம சாமி நிக்குது.

நம்ம சாமி சொல்லிச்சி அய்யனார்கிட்ட

"டேய் என் வீட்டு பிள்ளைடா அவ.அவள போக விடுடா.அவ வழியில்லாமத்தானே இப்படியே வரா"
இரண்டு சாமிக்கும் சண்டை. நான் பயந்து போய் கண்ணு முழிச்சிக்கிட்டேன்.

எனக்கு இதை எத்தனை தூரம் நம்புவது எனத் தெரியவில்லை.

அய்யனாரை கடக்கும் நாங்கள் அவரை கும்பிடாதது உண்மைதான்.அதுவே அவள் ஆழ்மனதுக்குள் குற்ற உணர்ச்சியாகி கனவாக வந்திருக்கலாம்.

பிறகு ஒரு தினம் நாங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு போய்விட்டு திரும்பினோம். மைத்துனன் சைக்கிளில் வந்தான். திரும்பும் போது மனைவி சொன்னாள்.

"நானும் அம்மாவும் மகனும் பஸ்ல (ஒரே ஒரு பஸ்) போறோம். நீங்க சைக்கிள்ல போங்க.போகும் போது மறக்காம அய்யானாருக்கு சூடம் ஏத்திட்டு போங்க மறக்க கூடாது" என்றாள்.

மைத்துனனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.எங்களுக்காக வந்திருந்தான்.

"டேய் தீப்பெட்டி எடுக்க மறந்துட்டன்டா" என்றேன் அவனிடம்

"மாமா,அக்கா ஒரு லூசு.அதுக்கு வேலை இல்ல.நாம போகலாம்" என்றான்.

சரி போகலாம் என்றேன் அரைமனதாக.

மிகச்சரியாக கோவிலின் வாசலில் நன்றாக போய் கொண்டிருந்த சைக்கிள் சறுக்கி விட்டு இரண்டு பேரும் கீழே விழுந்துவிட்டோம்.

இதை எத்தனை பேர் நம்புவீர்கள்?

மேலே உள்ளது எங்கள் குலதெய்வம் கோவிலில் நான் எடுத்தப் படம்

சனிக்கிழமை இரவே சொல்லிவிட்டான் ராகவன் மனைவி சுந்தரியிடமும் பிள்ளைகளிடமும்,
அமிர்தம் அத்தை நாளைக்கு வரன்னு சொல்லியிருக்காங்க. அவங்க கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். போற வரைக்கும் கொஞ்சம் பாத்து நடந்துக்குங்க.

"இதையே எத்தன தடவ சொல்லுவிங்க?எல்லா பொருளும் அதது இடத்துல இருக்கனும். டீவி போடக்கூடாது குழந்தைங்க விளையாட கூடாது. குழந்தைகள் அடம் பண்ணாம பதவிசா இருக்கனும், பொண்ணுனா அடக்க ஒடுக்கமா இருக்கனும்.நாம இருப்போம் குழந்தைங்க இருப்பாங்களா?"

"இரண்டு நாளோ மூன்று நாளோ. அப்பறம் போய்டுவாங்க. அதுவரைக்கும் எனக்காக ப்ளீஸ்"

சலிப்புடன் நகர்ந்தாள் சுந்தரி.

ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே எல்லாப் பொருளும் ஒழுங்கு படுத்தப்பட்டன

குழந்தைகள் தயார் படுத்தபட்டார்கள்.

ஓடி ஆடி விளையாடிய குழந்தைகளை ஒரு இடத்தில் உட்கார சொன்னால் உட்கார்வார்களோ?

நாடகம் பார்க்கா விட்டால் சுந்தரிக்கு தலை வெடித்து விடும்.அவளால் முடியுமோ?

ஞாயிற்றுக்கிழமை ஒருநாள்தான் சுந்தரி சாவகாசமாக எழுந்திருப்பாள்.
மனைவியை எதிர்பார்க்காமல் ராகவன் அன்று எல்லா வேலைகளையும் செய்வான்

ஆம்பிளை அடுப்படி பக்கம் போக கூடாது என்பாள் அமிர்தம்
கொஞ்சம் அல்ல நிறைய பழைமை வாதி.

எதிலும் ஒரு நேர்த்தி இருக்கனும் உக்காந்தா குத்தம் நிமிர்ந்தா குத்தம் சொல்பவள்.

'பேருதான் அமிர்தம். மொத்தமும் விசம்'.-மனதிற்குள் கருவினாள் சுந்தரி.

ஞாயிற்றுக்கிழமை டானென்று எட்டு மணிக்கு வந்து இறங்கினாள் அமிர்தம்.

வழக்கமாக அந்த நேரத்திற்கு வீடே இரண்டுபடும் காபி தம்ளர்கள் ஆங்காங்கே கழுவாமல் நிற்கும். ராகவன் குளித்து விட்டு தலை துவட்டிய ஈரத்துண்டு கட்டிலில் கிடக்கும்.

குழந்தைகளின் பொம்மைகள் காலில் இடறும்.

சுந்தரி அவைகளை எல்லாம் சாவகாசமா ஒழுங்கு படுத்துவாள். இன்று அவைகளை எல்லாம் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள். காரணம் அமிர்தம் வரப்போகிறாள்.

இதோ அமிர்தமும் வந்து இறங்கினாள்

பூரணக்கும்ப மரியாதை மட்டும் இல்லாமல் வரவேற்பு தடபுடலாக இருந்தது.

சுந்தரி அவளை கவனித்தாள்.முன்னெல்லாம் கடுகடுன்னு இருக்கும் முகம் இப்போது கனிவாக.

அமிர்தம் வீட்டை நோட்டம் விட்டாள்.

சுந்தரி கொடுத்த இட்லியை தின்றுவிட்டு காபியை குடித்தவள் கிளம்பி விட்டாள்.

"நான் வரேன் ராகவா"

"நாங்க ஏதாவது தப்பு பண்ணிட்டோமா?ஏன் அத்தை அதுக்குள்ள கிளம்புறிங்க?"

"இல்ல ராகவா.சந்தோசமா கிளம்புறேன். நல்லா கவனிச்சிங்க."

சுந்தரிக்கு சந்தோசம்.அப்பாடா தொலைஞ்சுது சனி.

"நான் போய்ட்டு வரேன் சுந்தரி"

"ம்."

வழக்கம் போல் வீடு தலைகீழானது.

மறுநாள் திங்கட்க் கிழமை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு ராகவனை வேலைக்கு அனுப்பி விட்டு கிடப்பது கிடக்க சுந்தரி டீவி முன்னால் உட்கார்ந்தாள்.

வாசலில் யாரோ மணி அடித்தார்கள்.
கதவை திறந்தால் அமிர்தம்

சுந்தரிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

இப்படி கிழவி சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிக்குதே.

"வாங்கம்மா வாங்க"

அமிர்தம் உள்ளே வந்தாள்

காபி தம்ளர்கள் ஆங்காங்கே
அடுப்படியில் கழுவாத பாத்திரங்கள் குவிந்தபடி ஒருப்பக்கம் துவைக்க வேண்டிய துணிகள்.
இதையெல்லாம் சாவகாசமா ஒழுங்கு படுத்துவாள் சுந்தரி.

அவளும்தான் என்ன செய்வாள்?காலையில் எழுந்து சமைத்து பிள்ளைகளை தயார் படுத்தி பள்ளிக்கு அனுப்பி விட்டு புருசனையும் அனுப்பி விட்டு கொஞ்சம் உடல் அலுப்பு போக டீவி முன்னால் உட்கார்வாள்.

இவையெல்லாம் அமிர்தம் அம்மாவிற்கு சுத்தமாக பிடிக்காது.

அவசர அவசரமாக அனைத்தையும் ஒழுங்கு படுத்தினாள் சுந்தரி.

"சுந்தரி இங்க வா.அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம். ஒரு டம்ளர் காபி மட்டும் கொடு"

காபி போட்டு எடுத்து போகையில் அமிர்தம் அழுது கொண்டிருந்தாள்.

"என்னம்மா ஆச்சி.ஏன் அழறிங்க?நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?"

"இல்லம்மா. நீ எதுவும் தப்பு பண்ணல. ஒரே ஒரு மகனை என் பக்கத்துல வச்சிக்க முடியாத பாவி நான். தொட்டதிற்கெல்லாம் குத்தம் குறை. மகன் கூட மருமக சிரிச்சி பேசுனா வயிறு எரியும்.எங்க நம்ம கிட்ட இருந்து மகன பிரிச்சுடுவாளோன்னு பயம் அதனாலையே அவ மேல ஏதாவது குத்தம் சொல்லிக்கிட்டே இருப்பேன். அவளும் பொறுத்து பொறுத்து என் பிள்ளையை எங்கிட்ட இருந்து பிரிச்சுட்டா. அதுமட்டும் இல்ல நம்ம சொந்தக்காரங்க எனனைப்பார்த்தாலே பயந்து நடுங்குவாங்க. இதெல்லாம் இப்பத்தான் புரியுது. எத்தனை காசு பணம் இருந்தும் என்ன? ஆதரவா பேச ஒரு மனுசாள் இல்லை.அவரும் எப்பவோ போய் சேர்ந்துட்டார். இதுக்குலாம் காரணம் நான்தான். குற்றங்குறைகளை அனுசரிச்சி போகாதது. குழந்தைங்க கிட்ட கூட எரிஞ்சு விழுந்துருக்கேன்.நேற்று கூட எனக்கு பயந்துதானே இருந்திங்க? பயமுறுத்தியோ மிரட்டியோ யாரும் யாரையும் மாத்த முடியாது.அதான் நான் உடனே கிளம்பி விட்டேன்."

சுந்தரிக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது.அவள் கண்ணீரை தொடைத்து விட்டாள்.

"அழாதிங்க அம்மா.இனிமே நீங்க எங்கயும் போக வேண்டாம்.எங்க

எத்தனைக் குடங்கள்
விற்றாலும்
நம் குடங்கள் மட்டும்
நிறைவதே இல்லை.

இருமனம்
கூடியதால்
இரு உடல் கூடிய
சுமை இது

இந்த சுமை கூட
சுகம்தான்
அன்னைக்கு.

நினைத்தவுடன்
'ஓ'வென
ஆர்ப்பரிக்கிறாய்
மனதில்...!

எப்போது உனை
நினைத்தாலும்
சம்மணமிட்டு
அமர்ந்து கொள்கிறாய்
மனதில்
இந்த ஐ போல.