செந்திலுக்கு வணக்கம் வைத்துவிட்டு ஐயோ இந்த கையால அந்த நாய்க்கு வணக்கம் வேற வச்சுட்டேனே கைய அடுப்புக்குள்ள அப்படியே வச்சி கரிக்கு விட்டுறலாமா என்று புலம்பிய கவுண்டமணி போல் மனதுக்குள் கறுவிக்கொண்டிருந்தான் சந்துரு.
பெண் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து இப்படித்தான் நிலைகொள்ளாமல் தவித்தான். அக்கா அம்மா தங்கை இப்படி எல்லோரும்
' பொண்ணுக்கு என்னடா குறைச்சல் ஏன்டா இந்த பொண்ண வேணாங்குற'
என்று கேட்டதிற்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தான்.
" நல்லாத்தான்டா பொண்ணு பாக்க வந்த உனக்கென்னடா ஆச்சி? ஏன் பிடிக்கலங்குற " - அக்கா
" டேய் நிறைய வரன் தட்டிப்போய் இந்த பொண்ணு அமைஞ்சிருக்குடா, பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு எல்லாத்துக்கும் உன்னப்பிடிச்சிப்போச்சாம்டா சரின்னு சொல்லுடா - அம்மா
அவனுக்கும் பெண்ணைப் பார்த்தவுடன் பிடித்து தான் இருந்தது.. ஆனால்?
" டேய் பொண்ணோட அம்மா போன் பண்ணாங்கடா அவங்களுக்கு என்ன சொல்றது இப்ப. உன் முடிவுதான் என்னா ஏன் வானாங்குற சொல்லித் தொல மொதல்ல"
அப்பா கிடுக்கிப்பிடி போட்டார்.
" பொண்ணோட அம்மா என்ன சொன்னா..... ங்க அப்பா?"
" மாப்பிள்ளைக்கு பொண்ண பிடிச்சிருக்கான்னு கேட்க சொன்னாங்க. சீக்கிரம் முடிவை சொல்லுங்க. வேற இரண்டு இடத்திலிருந்து பொண்ணு கேட்டு வந்திருக்காங்க அப்படின்னாங்க"
" யோசனை பண்ணி சொல்றேம்பா"
" இன்னும் என்ன அண்ணா யோசனை? " தங்கை
" இப்பவே காரணத்தை சொல்லு"- அக்கா
'எப்படிச் சொல்லி இவர்களுக்கு புரிய வைப்பது? '
நழுவப் பார்த்தான்.
" சொல்லிட்டு போடா"
அப்பா கர்ஜித்தார்
அப்பாவை பற்றி தெரியும்.
கோபம் வந்தால் அவ்வளவுதான்.
" டேய் எதா இருந்தாலும் மறைக்காம சொல்லுடா"- அம்மா
" இல்லம்மா பொண்ணோட அம்மா இருக்காங்கல்ல?"
" ஆமா ரம்யா அவளுக்கென்ன? உனக்கு நல்ல மாமியார் கிடைச்சிருக்காங்கடா"
" ஐயோ ரம்யா என்னோட மாமியார்னு சொல்லாதிங்க சகிக்கல"
" பின்ன எப்படி, அவளோட பொண்ண கட்டுனா அவ உனக்கு மாமியார் தானே? என்ன வயசு கொஞ்சம் கம்மியா இருக்கா அதுக்கென்ன?"
" ஐயோ எங்கூட ஒன்னா படிச்சவலாம் எனக்கு மாமியாரா?"
" என்னது ரம்யா உங்கூட படிச்சாளா?"
" ஆமாம்மா, படிக்கிறப்ப செம கிண்டல் பண்ணுவேன். என்னக்கண்டாலே அலறி அடிச்சிக்கிட்டு ஓடுவா"
"அடக்கடவுளே, அதான் வேணாங்குறியா?"
" இப்ப சொல்லு, அவளப்போய் சாரி அவங்களப்போய் எப்படி என் மாமியார்ன்னு சொல்றது?"
" சரி சின்ன மாமியாருன்னு சொல்லிக்க"
" சின்ன மாமியாரா?"
" ஆமா, அவளோட அக்காப்பொண்ண நீ கட்டுனா அவ உனக்கு சின்ன மாமியார்தானே?"
" அப்ப பொண்ணு பார்க்க போனப்ப வார்த்தைக்கு வார்த்தை என்னோட பொண்ணு என்னோட பொண்ணுன்னு சொன்னாளே"
" அது உன்ன சீண்ட... எப்படிலாம் அவள கிண்டல் பண்ணியாம் அவளே எல்லாத்தையும் சொல்லிட்டா. அப்பறம் தன்னோட அக்காப்பொண்ணுக்கு உன்னை மாப்பிள்ளையா சஜஸ்ட் பண்ணது அவளேதான்.
பொண்ணுக்கு அந்தப்பக்கம் உக்காந்து இருந்தவங்கதான் பொண்ணோட அம்மா. உனக்கு சர்ப்பிரைஸ் கொடுக்கத்தான் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கல... சரி சரி சின்ன மாமியாரை மரியாதையா பேசு நான் அவங்களுக்கு தகவல் சொல்லிடுறேன்"
" மொதல்ல அந்த ரம்யா நம்பர கொடும்மா அந்த ரம்யாவ ஒரு வழி்பண்றேன்"
" டேய் பொண்ணோட நம்பர கேட்டாலும் ஒரு லாஜிக் இருக்கு. மாமியாரோட நம்பர கேக்குறான் பாரு ..... போய் வேலைய பாருடா"
படிக்க நல்லாருந்துச்சி!
ReplyDelete