Thursday, August 4, 2016

கலிகாலம்

சமஸ்கிருத நூல்களிலிருந்து....

கலிகாலத்தில்....
~~~~~~~~~~~~~~

தர்மம், சத்தியம், ஆச்சாரம்,பொறுமை,தயை, ஆகியவை தினமும் நாசமடைந்து கொண்டே இருக்கும்.
நல்லகுணம் மேண்மை ஆகியவற்றுக்கு பணமொன்றே சாட்சியமாகும்.

நியாய விவகாரங்களில் வெற்றி தோல்வி செல்வத்தை பொறுத்தே அமையும்.

ஒருப் பெண்ணும் ஆணும் கணவன் மனைவியாக வாழ்வது ஆசையைப்ப பொறுத்தே அமையுமேத் தவிர, வேறு எந்த காரணத்தையும் கொண்டு இருக்காது.

வர்த்தகத்தில் ஏமாற்றுவேலையே முக்கிய அம்சமாக உருவெடுக்கும்.

பூணுல் ஒன்றைத்தவிர வேறு எதுவும் பிராமணனுக்கு அடையாளமாக இருக்காது.

நிறைய பேசுவன் பண்டிதன் என போற்றப்படுவான்.

பேராசை கொண்டவர்களும் கருனையற்றவர்களும் திருடர்களின் குணத்தை கொண்டவர்களும் ஆட்சியாளர் ஆவார்கள்.

இம்மாதிரி குணங்களை கொண்ட கலி முற்றும் போது தர்மத்தை மீண்டும் நிலைநிறுத்த பகவான்  அவதரிப்பார்.

#ஸ்ரிமத் பாகவதம்