Tuesday, March 10, 2015

கண்கள்

எனை குத்திக் கிழிக்கும்
உன் குறுவாட்களை
உறையிலிடேன்
உன்னோடு
நான் பேசவேண்டும்.

என்னை உரசிப் பார்க்காதே
உன்னையும் பற்றிக்கொள்(ல்)வேன்.

உதிர்ந்து போகிறேன்
உன்மடியில் விழவே...!